india
வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு… இழப்பீடு தொகை அறிவிப்பு…
கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே ஜூலை 30ந் தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் சூலூர் விமானப்படை மையத்தில் இருந்து 2 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வயநாட்டுக்கு மீட்புப் பணிகளுக்கு உதவிட அனுப்பப்பட்டுள்ளன.
சுமார் நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுகுறித்து ராகுல்காந்தி தன்னுடைய எக்ஸ் பதிவில், வயநாட்டின் மேப்பாடியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலச்சரிவு சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது.
நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள். கேரள முதல்வருடனு, வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் தொடர்புகொண்டு பேசியுள்ளதாக, தேவைப்படும் உதவிகளை தங்கள் கட்சியில் செய்து தர கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 24ஐ கடந்துள்ள நிலையில் சிக்கி இருக்கும் மற்றவர்களை பத்திரமாக மீட்கவும் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 30 பேர் கொண்ட பெங்களூரை சேர்ந்த மீட்புக்குழு வயநாடு விரைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும். ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.