Connect with us

india

நக்கலாக கருத்து சொன்ன நபர்…நேரில் சென்று நையைப்புடைத்த இளைஞர்கள்…

Published

on

Wayanad

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவால் இருனுற்றுக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த துயர சம்பவத்தினார் பலரும் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் மனைத உருக வைக்கக்கூடிய சோக காட்சிகளே தென்பட்டு வருகிறது.

மீட்புப் பணியில் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. மீட்புப் பணிகளை துரிதமாக்க இந்திய ராணுவ மேஜர் வீராங்கனை சீதா ஷெல்கே இரண்டே நாட்களில் சூரல் மலை மற்றும் முண்டைக்காய் பகுதிகளை இணைக்கும் இரும்புப் பாலத்தை கட்டி முடித்து சாதித்து அசத்தியிருந்தார். இப்படிப் பட்ட நிலையில் நிலச்சரிவின் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் இயல்பு நிலையை திரும்ப வரவழைக்க கடும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

Landslide

Landslide

தன்னார்வலர்கள், உதவும் மனம் படைத்தவர்கள் கேரளாவிற்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். இ ந் நிலையில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பசியால வாடும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரலாம் என பதிவிட்டிருந்தார். இவரின் இந்த தாய்மை எண்ணத்தை பலரும் பாராட்டி வந்த நிலையில் சுகேஷ்.பி.மோகனன் என்பவர் அந்த பெண்ணின் பதிவிற்கு ஆபாசமாக தனது பதிலை கருத்தாக பதிவிட்டிருந்தார்.

இதனையத்து செர்புளச்சேரி போலீசார் சுகேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவரைப் போலவே தனது ஆபாச கருத்தை பதிவிட்டிருந்த கோழிக்கோடு பகுதியைச்சேர்ந்த ஜார்ஜ் என்பவரை அந்த பகுதி இளைஞர்கள் சுற்றி வளைத்து தர்ம – அடி கொடுத்துள்ளனர். காவல் துறையின் நடவடிக்கை மற்றும் இளைஞர்கள் செய்த செயல் பற்றிய பேச்சுக்கள் தான் இப்போது அதிகமாக இருந்து வருகிறது.

google news