Cricket
எனக்கு IPL தான் பிடிக்கும்.. ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்..!
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் தனது ஐபிஎல் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதோடு டெல்லி அணி இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளரை நியமிக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் மீண்டும் பயிற்சியாளாராக இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் நான் மகிழ்ச்சியாக இருந்துள்ளேன். ஐபிஎல்-இல் வீரராக இருந்தது, மும்பை அணிக்கு பயிற்சியாளராக இருந்தது என ஐபிஎல்-இல் இருந்த தருணங்கள் எனக்கு பிடித்திருக்கிறது.
டெல்லி அணியுடன் ஏழு சீசன்கள் பயணித்து இருக்கிறேன், ஆனால் அதில் ஒன்றுகூட நான் எதிர்பார்த்த அளவுக்கோ, அணி நிர்வாகம் எதிர்பார்த்த அளவுக்கோ நிறைவடையவில்லை. நான் அந்த அணியில் இருந்துகொண்டு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவர முயற்சித்தேன், ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அவர்கள் இந்தியாவை சேர்ந்த பயிற்சியாளரை நியமிக்க முடிவு செய்வார்கள் என்று அறிந்து கொள்வீர்கள். அவர்கள் என்னிடம் இதேபோன்ற தகவலைத் தான் கூறினார்கள். அவர்கள் அணியின் பாதையை மாற்றி, சீசனில் சிறப்பாக கொண்டு செல்ல வைக்கும் ஒருவரை நியமிப்பது பற்றி தெளிவாக கூறினார்கள்.
எல்லாவற்றையும் விட இந்தியாவில் என்னால் அதிக நேரம் செலவிட முடிந்தது. பல்வேறு உள்ளூர் வீரர்களுடன் என்னால் நேரம் செலவிட முடிந்தது. மற்ற இடங்களில் என்னால் இப்படி இருக்க முடியாது. நான் அங்கிருந்தவரை பல சிறந்த மனிதர்களை சந்தித்தேன், பணியாற்றி இருக்கிறேன். தலைசிறந்த வீரர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் இன்னுமொரு ஐபிஎல் சீசனில் பயிற்சியாளராக தொடர எனக்கு குறைந்த அளவு வாய்ப்புகளே இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்த காலக்கட்டத்தில் சர்வதேச அணிகளுக்கு பயிற்சியாளராக தொடர்வது பற்றி நான் பரிசீலிக்க மாட்டேன். வாழ்க்கையில் சர்வதேச அணியுடன் பயணிக்க எனக்கு தற்போது சரியாக இருக்கும் என்று நினைக்கவில்லை. சர்வதேச பணியின் போது அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும், என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.