latest news
அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா!…பேசிப்பேசியே லீட் எடுத்துட்டாங்க…
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் இன்றியமையாத் தேவையாக மாறிவிட்டது செல்போன்கள். அதிலும் ஆன்டிராய்ட் வகை செல் போன்களின் வருகைக்குப் பிறகு நிலைமை தலை கீழாகவே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
உணவு உண்பது எப்படி முக்கியமோ, அதற்கு நிகரான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது இந்த செல்போன்கள் மனித வாழ்வில் தற்போது. கையில் மொபைல் போன்கள் இல்லாதவர்களை காணப்து அறிது என்பது தான் ஒத்துக்கொள்ளப்பட வேண்டிய உலகளாவிய உண்மையாகவும் மாறி வருகிறது.
தொலை தூரத்தில் உள்ளவர்களிடம் பேச உதவும் ஒரு தொடர்பு சாதனமாகத்தான் அறிமுகமானது லேண்ட் லைன் போன்கள். அதன் மீதான பரினாம வளர்ச்சியால் அடுத்தடுத்த கண்டுபிடிப்புக்கள் உதயமானது.
அதிலும் செல்போன்களின் வருகைக்கு பிறகு எவர், எங்கு இருந்தாலும் அவரை எளிதில் தொடர்புகொண்டு விடலாம் என்ற நிலை வந்தது. இதில் அடுத்த கட்டமாக ஆன்ட்ராய்ட் செல்போஙன்களின் அறிமுகம்.
உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அங்கு செல்போன் டவர் இருந்தால் அவரது முகத்தை நேரடியாக பார்த்து பேசவைக்கும் அளவிற்கு கொண்டு சென்று விட்டது விஞ்ஞான வளர்ச்சி.
ஆரம்பகட்டத்தில் 2ஜி ஸ்பீடில் துவங்கி இப்போது 5ஜி வேகத்திற்கு வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது தொலைத்தொடர்பு.
இந்த வகையான 5ஜி மொபைல்கள் பயன்பாட்டு சந்தையில் இந்தியா தற்போது ஒரு சாதனையை செய்துள்ளது. இது குறித்து “கவுண்டர் பாயின்ட்” நிறுவனம் நடத்திய ஆய்வில் 5ஜி சந்தையில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளதாக இந்த ஆய்வின் முடிவுகள் சொல்லியிருக்கிறது.
இந்த 5ஜி வகை மொபைல் பயன்பாட்டில் சீனா முதலிடத்தில் இருந்து வருவதாக சொல்லியுள்ள “கவுண்டர் பாயின்ட்”, நிறுவனம் 5ஜி சேவை விரிவாக்க காரணத்தினால் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது எனவும் சொல்லியிருக்கிறது. பட்ஜெட் விலையில் மொபைல் போன்கள் கிடைப்பது இந்த இடண்டாவது இடம் கிடைக்க காரணமாக இருப்பதாகவும் “கவுண்டர் பாயின்ட்” நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் சொல்லியிருக்கிறது.