india
பிரமோற்சவ விழா…திருப்பதிக்கு கூடதலாக பேரூந்து போக்குவரத்து…
ஆண்டு தோறும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் இந்தாண்டு விழா அக்டோபர் மாதம் நான்காம் தேதி துவங்குகிறது. நான்காம் தேதி துவங்க உள்ள இந்த விழா அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பிரம்மோற்சவ விழாவில் ஆண்டு தோறும் பங்கேற்கும் பக்தர்களில் அதிகமானோர் தமிழகத்தில் இருந்தே செல்வதாக தெரிய வந்துள்ளது.
இதனால் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக கூடதல் பேரூந்துகளை தமிழகத்திலிருந்து இயக்க ஆந்திர மற்றும் தமிழக போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளது. இரு மாநில போக்குவரத்து துறையினரிடையேயான இது குறித்த முக்கிய பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றி ஐம்பது சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் எத்தனை பஸ்களை இயக்கலாம் என அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் சொல்லி வருகிறது. நான் காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ள பிரம்மோற்சவ விழாவில் எட்டாம் தேதி தங்க கருட சேவையும், பன்னிரெண்டாம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடத்தப்பட உள்ளது. அதோடு இந்தாண்டிற்கான பிரம்மோற்சவ விழா நிறைவு பெறும்.
திருப்பதியில் நேற்றைய தினம் 67,668 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், இதில் 23,157 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும், உண்டியல் காணிக்கையாக ரூ.3.56 கோடி வசூலானதாகவும் திருப்பதியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே போல நேரடி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் எட்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.