ஸ்டார்லிங்கை பயன்படுத்தி உலகின் மூலை முடுக்கெங்கும் இன்டர்நெட் வசதியை வழங்க எலான் மாஸ்க் திட்டமிட்டுள்ளார். அதன்படி அமெரிக்காவில் வெற்றிகரமாக தனது திட்டத்தை நிறைவேற்றிய எலான் மஸ்க் அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் தனது ஸ்டார்லிங்க் சேவையை தொடங்கினார். தற்போது இந்தியாவில் இதன் சேவையை தொடங்க திட்டமிட்டு உள்ளார். அதன்படி இந்திய அரசாங்கமும் ஸ்டார்லிங் சேவையை தொடங்க அனுமதி கொடுத்துள்ளது.
ஸ்டார்லிங்க் கட்டண சேவையை வழங்குவதற்கு முன்னதாக முதலில் இதனை இலவசமாக பயன்படுத்த சோதனை காலத்தை வழங்கி உள்ளது. எலான் மஸ்க் இந்த விஷயத்தில் அம்பானியை பாலோ செய்கிறார். முதலில் அம்பானி ஜியோவை அறிமுகப்படுத்தும் போது இலவசமாக தான் மக்கள் பயன்படுத்துவதற்கு கொடுத்தார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏற்றம் செய்தார்கள். அதேப்போல எலான் மஸ்க்கும் தனது ஸ்டார்லிங்க் சேவையை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி மக்கள் ஒரு மாத கட்டணங்களை செலுத்துவதற்கு முன்பே இந்த சேவையை சோதிக்க முடியும்.

ஸ்டார்லிங்கின் சிறப்பம்சம் என்னவென்றால் மத்த நெட்வொர்க் எல்லாம் சிட்டி மற்றும் கிராமப்புறங்களில் மட்டும் இணைய சேவையை வழங்குகிறது. அதையும் தாண்டி இன்னும் மொபைலை பயன்படுத்த முடியாத கிராமங்கள் எவ்வளவோ இருக்கின்றன மேலும் காடுகளில் சுத்தமாக இன்டர்நெட் வசதி எந்த நெட்வொர்க்கிற்க்கும் கிடைப்பதில்லை. ஆனால் ஸ்டார்லிங் நிறுவனம் கூறுவது எங்களால் இந்தியாவின் கடை கோடியில் உள்ள கிராமங்களுக்கும் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் செயற்கைக்கோளின் உதவியால் எங்களால் இன்டர்நெட் சேவை வழங்க முடியும் என்று உறுதி அளிக்கிறது.
இந்திய சந்தையில் ஸ்டார்லிங்க் நுழைவது நாட்டின் தொலை தொடர்பு துறையில் போட்டியை தீவிர படுத்த கூடும் என்றும் கிராமப்புறங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொலைதூர இடங்களில் உள்ள வணிகங்களுக்கு முக்கியமான இணைப்பு தீர்வுகளை வழங்க கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் இரண்டு மாதங்கள் இந்தியாவின் செயல்பாட்டை தொடங்க தயாராகி வருகிறது ஸ்டார்லிங் நிறுவனம். அதன் செயற்கைக்கோள் டிஷ் சாதனத்தில் விலையை 33,000ஆக விலை நிர்ணயித்துள்ளது மற்றும் அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை வழங்க மாதத்திற்கு 3000 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.