போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய வெளியீட்டுடன் இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசிய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போதைய தகவல்களின் படி போக்கோ F7 ஸ்மார்ட்போன் வருகிற 25-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. போக்கோ F7 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இதற்கான டீசர் ஃப்ளிப்கார்ட் தளத்தில் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் சமீபத்திய டீசரில் புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அதன் முந்தைய மாடலை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை அதிக திறனுள்ள பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய போக்கோ ஸ்மார்ட்போன் 7550mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது.
இத்துடன் 90 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 30,000 வரை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை போக்கோ F7 ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர், LPDDR5X ரேம், UFS 4.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 6.83 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 50MP கேமரா, 8MP லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது அலுமினியம் ஃபிரேம் மற்றும் IP68 தர வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது.