7550 mah பேட்டரி.. 50 எம்பி சோனி கேமரா.. 90 w சார்ஜர்.. களமிறங்கும் poco f7

poco நிறுவனம் தனது f- சீரிஸில் புதிய மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனில் கவனிக்க கூடிய வகையில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இதன் பேட்டரி தான் விவோ,ஒப்போ போன்களை விட அதிகமான பேட்டரி பேக்கை கொண்டு மிகப்பெரிய பேட்டரியை poco இந்த மொபைலில் எடுத்து வருகிறது.

அதன்படி இது 7550 mah பேட்டரி கொண்டுள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 90 w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 22.5 w ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. மொத்தத்தில் இதை ஒரு பவர் பேங்க் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பெரிய பேட்டரியை கொண்டு மிதமான பயன்பாட்டால் இரண்டு நாட்களுக்கு மேல் இதன் பயன்பாடு வரும். ஹை கிராபிக்ஸ் கேம் விளையாடுபவர்களுக்கு ஒன்றரை நாட்கள் வரும்.

poco f7
poco f7

இந்த மொபைல் ஸ்னாப் டிராகன் 8 s ஜென் 4 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனின் ஒரு வேரியண்டல் ஆவது 12 ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. இந்த poco f7 மொபைலில் டிஸ்ப்ளே அமைப்பை பொருத்தவரை 6.8 சூப்பர் அமோல்ட் இதனுடன் 120 hz ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது.

கேமரா அமைப்பை பொருத்தவரை பின்புறம் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது அதில் 50எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்புற கேமராவை பொருத்தவரை 20 மெகாபிக்சல் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட poco f5 மற்றும் f6 ஆகிய மாடலின் விலை 30,000 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது poco நிறுவனம் இதன் விலையை முப்பதாயத்திற்கு கீழ் நிர்ணயிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் சந்தையில் நிலவிவரும் கடும் போட்டியை சமாளிக்க தான் இந்த முடிவு என்று வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

Leave a Comment