யபெர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ரொஜெக்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. யபெர் L2 பிளஸ் 4K பெயரில் கிடைக்கும் இந்த ப்ரொஜெக்டர் திறந்தவெளியிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அளவில் கச்சிதமாகவும், மிகக் குறைந்த எடை கொண்டிருக்கும் யபெர் L2 பிளஸ் 4K மாடல் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
சுழலக்கூடிய ஸ்டான்டு, பல்வேறு கோணங்களில் வைத்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது. இந்த ப்ரொஜெக்டர் அளவில் மிக சிறயதாக இருப்பதால் வீடு மற்றும் அலுவலகம் என எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். புதிய L2 பிளஸ் 4K மாடல் 1080 பிக்சல் தரத்தில் 700 ANSI லூமென்ஸ் பிரைட்னஸ் வழங்குகிறது. மேலும், இது அதிகபட்சம் 4K சப்போர்ட் கொண்டுள்ளது. அதிவேக ஆட்டோபோக்கஸ், ஆட்டோ கீஸ்டோன் கரெக்ஷன் போன்ற வசதிகள் இந்த மாடலின் சிறப்பம்சம் ஆகும்.
ஆடியோவிற்காக இரட்டை 8 வாட் ஜெபிஎல் ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பில்ட்-இன் ஸ்மார்ட் ஓஎஸ் உள்ளது. இத்துடன் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ சேவைகளுக்கான பிரீ-லைசன்ஸ் உள்ளது. இதனால் நேரடியாக ஸ்டிரீமிங் செய்ய முடியும். இந்த ப்ரொஜெக்டர் வைபை 6, ப்ளூடூத், HDMI மற்றும் யுஎஸ்பி கனெக்ஷன் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய யபெர் L2 பிளஸ் 4K போர்ட்டபில் அவுட்-டோர் ப்ரொஜெக்டர் மாடலின் விலை ரூ. 23,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த மாடல் ஒரிஜின்ஷாப் வலைதளத்தில் ரூ. 21,550 விலையிலும், அமேசான் வலைதளத்தில் ரூ. 22,990 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.