சமீபத்தில் தான் vivo t4 அல்ட்ரா மொபைல் வெளிவந்தது. தற்பொழுது அதே t சீரியஸில் புதிய மொபைலை களம்யிறக்க திட்டமிட்டுள்ளது vivo. இந்த தடவை பட்ஜெட்டில் என்ட்ரி லெவல் மொபைலாக களம் இறங்குகிறது.
ஏற்கனவே சந்தையில் விற்பனையில் இருக்கும் t3 லைட் 5ஜி நல்ல விற்பனையில் இருக்கும் நிலையில் இதன் அடுத்த வெர்ஷனில் மேம்படுத்தப்பட்ட பிராசஸருடன் டி 4 லைட்டு வெளியாக உள்ளது.ஜூன் 24ஆம் தேதி இந்த மொபைல் வெளியாக உள்ளது.

விவோ டி4 லைட் சிறப்பு அம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இதில் 1000 நிட்ஸ் பிக் பிரைட்னஸும் உள்ளது. இதில் டூயல் செட் அப் கொண்ட பின்புற கேமரா கொண்டுள்ளது அதில் 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் பொக்கே கேமராவுடன் வருகிறது.
மேலும் இதில் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் இரண்டு சிம் மற்றும் ஒரு எஸ்டி கார்டு போடும் ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. மேலும் இதில் 6000 mah பேட்டரி உள்ளது, இதனால் நீங்கள் 70 மணி நேரம் பாடல்களை கேட்டு மகிழலாம். தொடர்ந்து 19 மணி நேரம் கேம் விளையாடலாம். தொடர்ந்து 22 மணி நேரம் வீடியோ பார்க்கலாம் என்று விவோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கின்றது.
இவை அனைத்தும் மலிவு விலையில் வழங்குகிறது vivo. 4 ஜிபி ரேம் +128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் இதன் விலை 10,000 ஆக நிர்ணயிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் iqoo z10 லைட் இந்தியாவில் வெளியாகி உள்ளது அதே விலையில் இதுவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.