6GB ரேம், 5160mAh பேட்டரி, 50MP கேமரா… ரூ. 9,999-க்கு அறிமுகமான ரெட்மி போன்

ரெட்மி பிராண்டின் A4 5ஜி ஸ்மார்ட்போன் புதுவித மெமரி ஆப்ஷனில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக மெமரி தவிர இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போனில் 6.88 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5160mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு இரண்டு ஆண்டுகள் மென்பொருள் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச் வழங்குவதாக சியோமி நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் சப்போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜியோ ட்ரூ 5ஜி சப்போர்ட் கொண்டுள்ளது.

இத்துடன் ஹாலோ கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கிறது. அளவீடுகளை பொருத்தவரை ரெட்மி A4 5ஜி ஸ்மார்ட்போன் 171.88mm உயரம், 77.80mm அகலம், 8.22mm தடிமனாக இருக்கிறது. இதன் எடை 212.35 கிராம்களாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சியோமி நிறுவனம் தனது ரெட்மி Pad 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment