சவுண்ட் சும்மா பிச்சிக்கும்… வாட்டர் ப்ரூஃப் வசதியுடன் அறிமுகமான புது ஸ்பீக்கர்

ஜெலேப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்தது. பார்ட்டி ஸ்பீக்கர் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்பீக்கர் பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்பீக்கரில் RGB லைட்டிங், லேப்சின்க் மல்டி-ஸ்பீக்கர் பேரிங் மற்றும் வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய எபிக் பார்ட்டி ஸ்பீக்கர் 100 வாட்ஸில் 360 டிகிரி சவுண்ட் வெளிப்படுத்துகிறது. இதில் 2.5 இன்ச் Full Range டிரைவர்கள் மற்றும் 5.25 இன்ச் பேசிவ் வூஃபர் உள்ளது. இந்த பார்ட்டி ஸ்பீக்கர் முழு சார்ஜ் செய்தால் 16+ மணி நேர பேக்கப் வழங்குகிறது. இத்துடன் IPX6 தர வாட்டர்ப்ரூப் ரேட்டிங் பெற்றிருக்கிறது. இதில் உள்ள லேப்சின்க் தொழில்நுட்பம் மூலம் கிட்டத்தட்ட 100 ஜெலேப் ஸ்பீக்கர்களை ஒன்றாக இணைக்க முடியும்.

ஜெபட்ஸ் பார்ட்டி ஸ்பீக்கர் மாடலில் 2.5 இன்ச் Full Range டிரைவர்கள், 2 இன்ச் பேசிவ் வூஃபர்கள் உள்ளன. இந்த ஸ்பீக்கர் அதிகபட்சம் 30 வாட்ஸ் அவுட்புட் வழங்குகிறது. இது முழு சார்ஜ் செய்தால் 12+ மணி நேர பேக்கப் வழங்கும். இத்துடன் IPX6 தர வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள லூப் ஹேண்டில் மற்றும் ஜெலேப் மீடியா நாப் இதனை எங்கும் எடுத்து செல்லக்கூடியதாகவும், எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் மாற்றுகிறது.

ஜெலேப் கோ பார்ட்டி ஸ்பீக்கர் மாடலில் 2.0 இன்ச் Full Range டிரைவர்கள், இரட்டை 2 இன்ச் பேசிவ் வூஃபர்கள் உள்ளன. இந்த ஸ்பீக்கர் முழு சார்ஜ் செய்தால் 16 மணி நேர பேக்கப் வழங்கும். இத்துடன் IPX6 தர வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள லூப் ஹேண்டில் மற்றும் ஜெலேப் மீடியா நாப் இதனை எங்கும் எடுத்து செல்லக்கூடியதாகவும், எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் மாற்றுகிறது. மேலும் இதில் ஸ்பீக்கர் போன் அம்சம் உள்ளது.

பாப் பார்ட்டி ஸ்பீக்கர் மாடலில் 2.0 இன்ச் Full Range டிரைவர்கள், 2 இன்ச் பேசிவ் வூஃபர்கள் உள்ளன. இந்த ஸ்பீக்கர் முழு சார்ஜ் செய்தால் 12+ மணி நேர பேக்கப் வழங்கும். இத்துடன் IPX5 தர வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டுள்ளது. இந்த மாடலில் கழற்றக்கூடிய லூப் ஹேண்டில் மற்றும் மல்டி ஃபன்ஷன் வசதி உள்ளது.

விலையை பொருத்தவரை ஜெலேப் பாப் பார்ட்டி ஸ்பீக்கர் விலை 19.99 டாலர்கள் (ரூ. 1,734), கோ பார்ட்டி மாடல் 29.99 டாலர்கள் (ரூ. 2602), ஜெபட்ஸ் பார்ட்டி மாடல் விலை 69.99 டாலர்கள் (ரூ. 6072) மற்றும் எபிக் பார்ட்டி மாடல் 149.99 டாலர்கள் (ரூ. 13,013) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment