விவோ மற்றும் oppo நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் வரிசையாக தனித்தனி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த ரெட்மி பட்ஜெட் விலையில் புதிய மொபைலை களம் இறக்க உள்ளது. ரெட்மி நிறுவனத்தின் redmi 15c மாடல் மொபைல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்மி 15c சிறப்பம்சங்கள் :
இதில் 6.8 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது 120 ஹெச் ரெப்ரெஷ்ரேட்டுடன் வருகிறது. ப்ராசசர் பொருத்தவரை தினசரி உபயோகத்திற்கு பக்காவாக பொருந்தக்கூடிய ஸ்னாப் டிராகன் 4gen எஸ் ஓ சி சிப்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இது lpddr 4x டைப், 6 ஜிபி ரேம் வரை சப்போர்ட் செய்கிறது. மேலும் இதில் விர்ச்சுவல் ரேம் அமைப்பும் உள்ளது. கேமரா அமைப்பை பொறுத்தவரை பின்பக்கம் டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. மேலும் இது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் பொக்கே லென்சுடன் வருகிறது.
முன்புற செல்பி கேமராவை பொறுத்தவரையில் எட்டு மெகாபிக்சல் உடன் வருகிறது ip 52 தண்ணீர் மற்றும் தூசு பாதுகாப்பு சான்றுடன் வருகிறது. இதில் 5160 mah கொண்ட பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 18 w பாஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
இந்த மாடலின் விலை பொருத்தவரையில் பட்ஜெட் ரேஞ்சான 10,000 முதல் 15000 ரேன்ஜ்க்குள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான ரெட்மி 14 சி 5 ஜி மாடல் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 10,000 விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.