போட்டிக்கு நாங்களும் வரலாமா.. வருகிறது டிரம்ப் ஸ்மார்ட்போன்..இதுல என்ன புதுசா இருக்கு..?

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர் அடிப்படையில் மிகப்பெரிய தொழில் அதிபர். ஆயிரக்கணக்கான கோடி சொத்து மதிப்பு கொண்டிருந்தாலும் புது புது தொழில்களில் முதலீடு செய்வது தொடங்குவது என இருந்த வண்ணமாக இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்மார்ட் போன் தொழிலில் களமிறங்க உள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் லீக்ஸ் மற்றும் அதன் வடிவமைப்பு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பார்ப்பதற்கு அப்படியே ஐ போன் காபி போல இருக்கிறது. ஒருவேளை டிரம்ப் ஐபோன் மார்க்கெட்டை தகர்க்கத் தான் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடுகிறாரா..? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில் ட்ரம்ப் அறிமுகப்படுத்தும் அந்த மொபைல் மாடலின் பெயர் T1. இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம்.

இதில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் அமலோட் டிஸ்ப்ளே 120HZ ரெஃப்ரேஷ் ரேட் உடன் வருகிறது. மேலும் இதில் 50 எம்பி கேமரா உடனும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் வருகிறது. 2 எம்பி மேக்ரோ சென்சார் உடன் பின்புற ட்ரிபிள் கேமரா செட்அப் உடன் வருகிறது.

trump t1
trump t1

முன்பக்க கேமரா அமைப்பை பொருத்தவரை 16 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் வருகிறது. இதில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் களில் கிடைக்கிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 15 osல் இயங்குகிறது. இதில் 5000mah பேட்டரி.

20 w பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் இதில் 3.5mm எம் ஜாக் கிடைக்கிறது. ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஏஐ தொழில் நுட்பத்துடன் கூடிய பேஸ் அண்லாக் போன்ற வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது.‌ இதன் விலை அமெரிக்காவில் 499 டாலர் கொடுத்து முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியீட்டு தேதி தெளிவாக இல்லை டிரம்ப் மொபைல் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்று லீக்ஸ் தகவல்கள் மூலம் தெரிகிறது.donald

Leave a Comment