சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போனினை சமீபத்தில் தான் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் சியோமி ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. புதிய ரெட்மி டர்போ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இதன் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சீனாவில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி ரெட்மி டர்போ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மிகப்பெரிய பேட்டரி மற்றும் 6.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. சீனாவை தவிர்த்த சர்வதேச சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் போக்கோ F8 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.
இது குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களில் ரெட்மி டர்போ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் Flat ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் 8000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி டர்போ 4 அல்லது ரெட்மி K80 அல்ட்ரா பெயர்களில் கூட அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ F7 ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ரெட்மி டர்போ 4 மாடலில் இருந்த மாதிரியே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வகையில், போக்கோ F8 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ரெட்மி டர்போ 5 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படலாம். இந்த மாடலில் 8000mAh பேட்டரி மற்றும் 6.8 இன்ச் Flat டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
போக்கோ F7 அம்சங்கள்:
சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ F7 மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர், 6.83 இன்ச் OLED டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது லென்ஸ், 20MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 7550mAh பேட்டரி, 90 வாட் வயர்டு பாஸ்ட் சார்ஜிங் வசதி, 22.5 வாட் வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. மேலும் இன் டிஸ்ப்ளே ஆப்டிக்கல் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.