நீண்ட நாள் காத்திருப்பு ஓவர்.. கேமிங் பிரியர்களே நாளைக்கு வருகிறது poco வின் புதிய போன்.. என்ன மாடல்.?

போக்கோ நிறுவனம் மிட் ரேன்ஜ் பிளக்ஷிப் செக்மெண்டில் கடந்த வாரம் புதிய போனை அறிமுகப்படுத்தியது. அதுதான் கேமிங் பிரியர்களுக்கான poco f7 போன். மொபைல் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து எப்பொழுது விற்பனைக்கு வரும் என்று இதன் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர். அந்தக் காத்திருப்புக்கு முடிவு கட்டும் விதமாக ஜூலை 1-ம் தேதி விற்பனைக்கு வந்தது.

வந்து சில மணி நேரத்திற்குள்ளாக அனைத்து ஸ்டாக் போன்களும் தீர்ந்துவிட்டது. இதிலிருந்து தெரிகிறது அதன் சிறப்பம்சங்கள் ரசிகர்களை எவ்வளவு கவர்ந்திருக்கிறது என்று. டிமான்டை புரிந்து கொண்ட இகாமர்ஸ் தளம் நாளை அதாவது ஜூலை நான்காம் தேதி மீண்டும் இதன் மறு விற்பனையை தொடங்கி இருக்கிறது.

மேலும் பேங்க் ஆப் உடன் இந்த மொபைல் விற்பனைக்கு வருகிறது இதன் 12 ஜிபி ரேம் +256 ஜிபி வேரியண்ட் 31,999 ருபாய் ஆக உள்ளது. இதன் 12 ஜிபி ரேம்+512ஜிபி மெமரி வேரியன்ட் 33,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்தது. மேலும் அறிமுக சலுகை மற்றும் வங்கி கார்டை பயன்படுத்தி 2000 தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம்.

poco f7 f5
poco f7 f5

poco f7 சிறப்பம்சங்கள் :
இதில் 6.83 இன்ச் அளவுள்ள 1.5k resolution உடன் ஓஎல்இடி தரத்தில் 120ஹச் ரெஃப்ரஷ்ரேட்டுடன் 3200 நீட்ஸ் பிக் பிரைட்னஸ் உடன் இதன் டிஸ்ப்ளே வடிவமைப்பு உள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 processor இந்த poco f7 மொபைலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அட்ரினோ 825 gpu கிராபிக்ஸ் கார்டு இதில் இடம் பெற்றுள்ளது.

இதனால் கேம் விளையாடுபவர்களுக்கு இது தரமான மொபைல் என்றே சொல்லலாம். மேலும் இதில் 12 ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி மற்றும் 512 ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கப்பெறுகிறது. இதில் ஹைபர் ஓஎஸ்2 ஆண்ட்ராய்டு 15os உடன் இயங்குகிறது. மேலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்டும் பாதுகாப்பு அப்டேட் வழங்கப்படும் என்று போக்கோ உறுதி அளித்து இருக்கிறது.

கேமரா அமைப்பை பொறுத்தவரை இதில் 50 எம்பி சோனி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ராவைடு கேமரா என டூயல் ரியர் கேமரா உடன் வருகிறது. முன்பக்க செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 20 எம்பி கேமராவும் உள்ளது. மேலும் இது 4k வீடியோ ரெக்கார்டிங் ஆப்ஷனும் இருக்கிறது.

இதில் யுஎஸ்பி டைப் சி, ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள், இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஐ ஆர் சென்சார் உள்ளிட்ட பல வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளது. பேட்டரி அமைப்பை பொருத்தவரை இதில் 7550 mah கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இதனை சார்ஜ் செய்வதற்கு 90w பாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கிறது. மேலும் இது ip 69 ரேட்டிங் உடன் வருகிறது.

Leave a Comment