சீன ஸ்மார்ட்வாட்ச் நிறுவனமான அமேஸ்பிட் இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு அசத்தல் விலை குறைப்பு வழங்குகிறது. அமேஸ்பிட் T-Rex 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கு அந்நிறுவனம் ரூ. 10,000 விலை குறைப்பு அறிவித்துள்ளது. ரக்கட் மிலிட்டரி வாட்ச் மாடலான T-Rex 3 48 மில்லிமீட்டர் அளவில் ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. முரட்டுத்தனமான பயணங்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கும் அமேஸ்பிட் T-Rex 3 பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.
அதன்படி T-Rex 3 மாடலில் ஆஃப்லைன் மேப்ஸ் மற்றும் பில்ட்-இன் ஜிபிஎஸ் கொண்டிருக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்மார்ட்வாட்ச் 27 நாட்களுக்கு பேக்கப் வழங்குகிறது. இதில் உள்ள ஸ்கிரீன் 2000 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதேபோன்ற வசதி ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடலிலும் உள்ளது. இத்துடன் 10 ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் AI Coach கொண்டிருக்கிறது.
அமேஸ்பிட் T-Rex 3 மாடல் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ரய்டு சாதனங்களுடன் இணைந்து இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 170 வொர்க்-அவுட் மோட்கள் உள்ளன. அதிவேக கனெக்டிவிட்டியை வழங்குவதற்காக இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆறு செயற்கைக்கோள் சிஸ்டம்களால் இயக்கப்படும் டூயல் பேண்ட் அலைவரிசையை ஆதரிக்கிறது. இது பயனர் இருக்குமிடத்தை மிகத் துல்லியமாக டிராக் செய்யும்.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் அமேஸ்பிட் T-Rex 3 விலை ரூ. 29,999 ஆகும். தற்போதைய சலுகையின் கீழ் இதன் விலை ரூ. 19,999 என மாறி இருக்கிறது. இத்துடன் பயனர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1500 வரை தள்ளுபடி பெற முடியும்.