பிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்தில் இன்பினிக்ஸ் நோட் 40pro 5G மொபைல் ஆஃபர் விலையில் கிடைக்கிறது. இந்த மொபைல் தற்போது 32% தள்ளுபடி செய்யப்பட்டு 18,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பேங்க் ஆஃபரை பயன்படுத்தி இன்னும் குறைந்த விலைக்கு வாங்க முடியும். விளக்கேற்ற அம்சங்களுடன் இந்த மொபைல் ஆஃபர் விலையில் கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி சிறப்பு அம்சங்கள் :
இதில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் கர்வ் அமலோடு டிஸ்ப்ளே 120ஹச் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. இதனால் வீடியோ பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையில் இருக்கும். இதன் பிராசசர் மீடியாடெக் டைமண்ட் சிட்டி 7020 என்ற சிப்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இது 6nm அளவில் இருப்பதால் இன்னும் எபிசியன்டாக இருக்கும். மேலும் இது ஆண்ட்ராய்டு 14 ஓ எஸ் உடன் இயங்குகிறது.

கேமரா அமைப்பை பொறுத்தவரை இதில் 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ 2 டெப்த் கேமரா என்கிற மூன்று கேமராவுடன் வருகிறது. முன்புற செல்பி கேமராவை பொறுத்தவரை 32 மெகாபிக்சல் உடன் வருகிறது. மேலும் இதில் ஆக்டிவ் ஹாலோ எஐ லைட்னிங், ஆல்ரவுண்டர் ஃபாஸ்ட் சார்ஜர் 2.0 போன்ற அசத்தலான தொழில்நுட்பத்தை இந்த மொபைல் கொண்டுள்ளது.
ரேம் அமைப்பை பொருத்தவரை 8gb ரேம் மற்றும் 256 gb ஸ்டோரேஜ் வேரியண்டில் வெளி வருகிறது. பேட்டரி அமைப்பை பொருத்தவரை இதில் 5000mah பேட்டரி மற்றும் இதனை சார்ஜ் செய்வதற்கு 45w சார்ஜிங் வசதியும் இடம்பெற்றுள்ளது. இது ip53 தர சான்றிதலுடன் வருகிறது. மேலும் வைபை ப்ளூடூத், என்எப்சி, ஜிபிஎஸ், டைப் சி போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களும் இந்த இன்பினிக்ஸ் நோட் 40ப்ரோ 5g-ல் இடம் பெற்றுள்ளது.