இன்டர்நெட் சேவையில் இந்தியாவை பொறுத்த வரை ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இவர்களுக்கு பின் அடுத்தடுத்த நிலைகளில் மற்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. என்னதான் மொபைல் நெட்வொர்க்கில் ஆதிக்கம் செலுத்தினாலும் பைபர் சேவையிலும் ஏர்டெல் பைபர் மற்றும் ஜியோ பைபர் தான் இன்றும் பல வீடுகளில் கேபிள் டிவி கனெக்சனுக்கு பதிலாக இவர்களின் இன்டர்நெட் சேவை தொடர்கிறது.
இன்டர்நெட் சேவை மட்டுமின்றி மெயின் ஸ்ட்ரீம் டிவி சேனலின் உள்ளடக்கிய செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் பல வீடுகளில் கேபிள் மற்றும் டிஷ் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இவர்களுடன் போட்டியிட தற்போது டாடா நிறுவனத்தின் tata play பைபர் சேவையை பல தரமான திட்டங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த பிளானில் என்னென்ன சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

டாடா பிளே ஃபைபர் சிறந்த திட்டம் :
இதில் 100 எம்பிபிஎஸ் திட்டத்தை பொருத்தவரை இது ஆரம்ப நிலை திட்டம் ரூபாய் 900க்கு ரீசார்ஜ் செய்தால் (இதனுடன் ஜிஎஸ்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்). ஒரு மாதம் வேலிடிட்டி கிடைக்கும். 100 எம்பிபிஎஸ் வேகத்துடன் அன்லிமிடெட் இன்டர்நெட் மற்றும் பலவகையான ஓடிடி நன்மையுடன் வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கஸ்டமர் கால் ஏதேனும் 4 பின்வரும் ஓட்டிட்டு தளங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜியோ ஹாட்ஸ்டார், ஆஹா, பேன் கோட், டிஸ்கவரி ப்ளஸ், சன் நெக்ஸ்ட், ஜீ5 ஆப்பிள் டிவி பிளஸ், லயன்ஸ் கேட் பிளே இதில் நான்கு மட்டும் இலவசமாக கிடைக்கிறது.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் 200க்கும் மேற்பட்ட மெயின் ஸ்ட்ரீம் டிவி சேனல்கள் வழங்கப்படுகிறது. மாதத்திற்கு 3.3 டிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த 3 டிபியும் முடிந்து போகும் பட்சத்தில் தொடர்ந்து இன்டர்நெட் சேவை வழங்கப்படும். அது 3 எம்பிபிஎஸ் வேகத்தில் செயல்படும்.