`Google AI bug’: கூகுள்கிட்ட இருந்து ரூ.25 லட்சம் பரிசு பெற புதிய போட்டி!

கூகுள் நிறுவனம், தனது செயற்கை நுண்ணறிவு தளங்களில் இருக்கும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு சொல்பவர்களுக்கு 25 லட்ச ரூபாய் அளவுக்குப் பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறது.

Google AI bug

கூகுள் நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு தளங்களில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து சொல்லும் சைபர் பாதுகாப்பு நிபுணர்களுக்கென பிரத்யேக பரிசுத் தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறது. AI bug bounty program என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் பரிசுத் தொகை திட்டத்தின் கீழ், கூகுள் பிரவுசர், ஜெமினி செயலிகள், கூகுள் சர்ச் மற்றும் ஜிமெயில் போன்றவற்றில் இருக்கும் ஏஐ டூல்ஸில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு கிடைக்கும்.

இதற்கான பரிசுத் தொகை 20,000 முதல் 30,000 அமெரிக்க டாலர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், NotebookLLM போன்ற சிறிய செயலிகளின் பிரச்சனைகளைக் கண்டறிந்து சொல்பவர்களுக்கு இதைவிட குறைந்த தொகையிலான பரிசு கிடைக்கும்.

என்னென்ன பிரச்சனைகள்?

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் கூகுளின் செயலிகளின் செயல்பாட்டின்போது, தவறான அல்லது சரியல்லாத செயல்பாடுகள், அக்கவுண்ட் தகவல்களை கசியவிடுவது அல்லது தேவையில்லாத மெயில் கணக்குகள், போன் நம்பர்களுக்கு செய்திகளைக் கசியவிடுவது போன்ற பிரச்சனைகள் இருந்தால், அதை நேரடியாக கூகுள் நிறுவனத்திடம் சுட்டிக் காட்டாலம்.

அதேநேரம், தவறான தகவல்கள் அல்லது வெறுப்புப் பேச்சு போன்றவற்றை அடையாளம் காண்பதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தின் கீழ் பரிசுத் தொகையைக் கோர முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Leave a Comment