Mappls: அரட்டை மட்டுமில்ல நம்மகிட்ட கூகுள் மேப்புக்கும் சவால் விடுற வசதி இருக்கு தெரியுமா?

வாட்ஸ் அப் மெசஞ்சரில் இருக்கும் வசதிகளைப் போலவே, இன்னும் சொல்லப் போனால் அதில் இல்லாத சில வசதிகளையும் கொண்டு இந்தியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் அரட்டை செயலிக்கான வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கூகுள் மேப்புக்கு சவால் விடும் வகையிலான இந்தியாவில் உருவாக்கப்பட்ட mappls செயலியைப் பற்றிய விவாதமும் எழுந்திருக்கிறது.

Google Maps Vs Mappls

MapMyIndia நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் Mappls வசதி முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. கூகுள் மேப்ஸில் இருக்கும் வசதிகளோடு கூடுதலாக 3டி வியூ வசதியும் கூட இந்த செயலில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் கூட, டெல்லி போலீஸ் அளித்த ரியல்டைம் டிராஃபிக் அப்டேட்டுகளை அறிந்துகொள்ள பலரால் Mappls செயலியே பயன்படுத்தப்பட்டது.

அரட்டை செயலி அறிமுகமாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே Mappls செயலி அறிமுகமாகி பயன்பாட்டில் இருந்தாலும், கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் மேப் வசதி ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பதால், இதன் பயன்பாடு பற்றி அதிகம் வெளியில் தெரியவில்லை. இந்தநிலையில்தான், அரட்டை பற்றிய விவாதங்களுக்குப் பிறகு Mappls பற்றிய பேச்சுகளும் எழுந்திருக்கின்றன.

மேப்பிங், நேவிகேஷன் போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் MapMyIndia நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இது கூகுள் மேப்ஸை விட உள்ளூர் கண்டண்டுகளை அதிகம் சார்ந்து செயல்படுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி நீங்கள் உள்ளூர் உணவகங்கள், விடுதிகள் தொடங்கி எல்லாவற்றையும் தேடிக்கொள்ள முடியும்.

மேம்பாலங்கள் பற்றிய தெளிவான மார்க்கிங் வசதி கூகுள் மேப்ஸில் சில ஆண்டுகளுக்கு முன் தான் அப்டேட் செய்யப்பட்டது. ஆனால், Mappls இந்த வசதியை பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 3டி வியூ மூலம் ஒரு இடத்தின் நேரடிக் காட்சி போன்ற காட்சியமைப்பை நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும்.

Leave a Comment