விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களுக்கான டெஸ்க்டாப் மெசெஞ்சர் செயலிகளை நிறுத்த இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் ஃபேஸ்புக்கின் மெசெஞ்சர் டெஸ்க்டாப் செயலி செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Messenger desktop App
இதன்படி, வரும் டிசம்பர் மாத தொடக்கம் முதலே பயனாளர்கள், தங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள மெசெஞ்சர் செயலிகளில் லாக்-இன் செய்ய முடியாது. அப்படி லாக்-இன் செய்ய முயற்சிப்பவர்கள், நேரடியாக ஃபேஸ்புக்கின் மெசெஞ்சர் இணையதளத்துக்கு ரீ-டைரக்ட் செய்யப்படுவார்கள். அதேநேரம், ஆப்பிள் மேக் ஓஎஸ் பயனாளர்கள், தங்கள் கணக்குகளை மாற்றிக்கொள்ள 60 நாட்கள் நேரம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக மெசெஞ்சர் பயனாளர்களுக்கு முன்கூட்டியே நோட்டிபிகேஷன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, மெசெஞ்சரை வேறு வழிகளில் லா-இன் செய்ய உரிய அளவுக்கு கால அவகாசம் அளிக்கப்படும். விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களைப் பயன்படுத்தும் பயனாளர்கள், தங்கள் மெசெஞ்சர் கணக்குகளை இணையதளம் வாயிலாகப் பயன்படுத்துவதில் எந்தவொரு சிக்கலும் இருக்காது என்றும் மெட்டா தெரிவித்திருக்கிறது.
ஸ்டோரேஜ் மற்றும் சாட் ஹிஸ்டரி
மெசெஞ்சர் பயனாளர்கள், தங்கள் கணக்குகளை பாதுகாப்பான ஆன்லைன் வெர்ஷனுக்கு மாற்றிக்கொள்ளும் முன்னர், தங்கள் மெசெஞ்சர் செயலியில் இருக்கும் ஸ்டோரேஜ் மற்றும் சாட் ஹிஸ்டரியை “Turn on secure storage” ஆப்ஷன் மூலம் மாற்றிக்கொள்ளும்படியும் மெட்டா அறிவுறுத்தியிருக்கிறது. நீங்க மெசெஞ்சர் செயலியைப் பயன்படுத்துபவர் என்றால், உடனே மாத்திக்கோங்க!