விஜயின் பிளானே அதுதாங்க…அமைச்சர் கோவி செழியன் என்ன சொல்கிறார் பாருங்க

தவெக திமுக இடையே தான் போட்டி என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் தவெக தலைவரின் நிலை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.

வெல்ல போவது திமுக தான் இரண்டாம் இடத்திற்கு தான் பாஜக தவெக இடையே போட்டி உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டி.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பூதலூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது இப் போட்டியினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் தொடங்கி வைத்தார். முதல் நான்கு இடத்தைப் பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வ்ழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கோவி செழியன் கூறியபோது, தமிழக வெற்றி கழகம் திராவிட முன்னேற்ற கழகம் இடையே தான் போட்டி என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் தவெக தலைவரின் நிலை , ஆனால் வெல்லப்போவது திராவிட முன்னேற்ற கழகம் தான் முதலிடம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு த்தான். இரண்டாம் யாருக்கு என்பதுதான் பாரதிய ஜனதா கட்சி தமிழக வெற்றி கழகம் கட்சிகளுக்குள் போட்டியே தவிர திமுகவிற்கு அல்ல என்று கூறியுள்ளார்.

Leave a Comment