தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். சூப்பர் ஸ்டார் ரஜினியை விட சம்பளம் மற்றும் வியாபாரத்தில் முன்னணியில் இருப்பவர் இவர்.
தற்போது விஜய் திரையுலகை விட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது ஆனால் காங்கிரஸ் தரப்பில் எவ்வித தகவலும் இல்லை. இது வதந்தி என்றே கூறப்பட்டது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரகுல்காந்தியை நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதம் இந்த ச்ந்திப்பு நடக்க உள்ளதாகவும், அதற்கான தேதி, இடம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா இல்லை வழக்கம் போல வதந்தியா என்பது தெரியவில்லை.