4000 கோடியும் போச்சு, 4.5 வருஷமும் போச்சு!..சென்னை வெள்ள பாதிப்புக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்..

சென்னையில் திரும்பத் திரும்ப நிகழும் வெள்ளப் பாதிப்புகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காகக் கோடிக் கணக்கில் செலவழிக்கப்பட்டும், தலைநகரில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கேள்வி எழுப்பிய விஜய்..
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி பேசிய தவெக தலைவர் விஜய், “வெள்ளத்தைக் கட்டுப்படுத்த 4,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கடந்த நான்கரை வருடங்களில் ஆட்சியில் இருந்தும் சென்னைக்கு எந்த நிரந்தர தீர்வும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு மழைக் காலத்திலும் மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிப்பது தொடர்கதையாகிறது,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.

மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம், மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளது என்று கூறிய விஜய், இந்தச் சூழ்நிலை மாற வேண்டும் என்றும், மக்கள் நலனே முதன்மை என்றும் வலியுறுத்தினார்.

Leave a Comment