விஜய் அம்மா முன்னாடி கை கட்டி நின்னதை மறந்துட்டீங்களா?.. ஜனநாயகன் விவகாரத்தில் சரத்குமார் விளாசல்

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்துப் பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் பாஜக நிர்வாகியுமான ஆர். சரத்குமார், விஜய்யின் கடந்த கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தலைவா’ பிளாஷ்பேக்கை கிளறிய சரத்குமார்:
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், விஜய்க்கு இது போன்ற சிக்கல்கள் புதியதல்ல எனக் குறிப்பிட்டார்.

“விஜய்க்கு ஜனநாயகன் படம் தடைபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஜெயலலிதா அம்மா ஆட்சியில் இருந்தபோது ‘தலைவா’ படத்திற்கு இதே போன்ற பிரச்சனை வந்தது. அப்போது விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும் அம்மா முன்னால் கைகட்டி நின்று அனுமதி கேட்டதை உலகம் அறியும். இப்போது எல்லாவற்றையும் அரசியல் காரணங்களுக்காக நடப்பதாகச் சித்தரிப்பதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.”

சென்சார் போர்டுக்கு ஆதரவு:
தணிக்கைத் துறை என்பது ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு என்றும், அதில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அவர் வாதிட்டார்.

அரசியல்வாதிகள் இல்லை:
“தணிக்கை வாரியத்தில் எந்த அரசியல்வாதியும் இல்லை. அங்கு இருப்பவர்கள் திரைத்துறை சார்ந்த நிபுணர்கள். நாட்டிற்கு நல்ல கருத்துக்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர்கள் சில மாற்றங்களைக் கோருகிறார்கள்.”

அரசை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?:
“எத்தனையோ படங்கள் சென்சாரால் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதற்கெல்லாம் அரசை மட்டும் குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்? விஜய் அம்மா முன்னாடி கை கட்டி நின்னதை மறந்துட்டீங்களா?.. ஜனநாயகன் விவகாரத்தில் சரத்குமார் விளாசல்எதற்கெடுத்தாலும் அரசைத் திட்டுவதுதான் அரசியல் என்று விஜய் நினைக்க வேண்டாம். சினிமா வேறு, நிஜ அரசியல் வேறு. சென்சார் என்பது சட்டப்படியான ஒரு நடைமுறை,” என சரத்குமார் காட்டமாகத் தெரிவித்தார்.

தனி நீதிபதி ‘ஜனநாயகன்’ படத்திற்குச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டும், சென்சார் போர்டு மேல்முறையீடு செய்துள்ள சூழலில், சரத்குமாரின் இந்தப் பேச்சு தவெக ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “விஜய் இப்போது ஒரு கட்சியின் தலைவர், அவரைப் பழைய சம்பவங்களுடன் ஒப்பிடுவது முறையல்ல” என அவரது ஆதரவாளர்கள் பதிலளித்து வருகின்றனர்.

Leave a Comment