மானம், சூடு, சொரணை பார்க்காதீங்க.. காசை வாங்குங்க!.. தவெக தொண்டர்களுக்கு லயோலா மணி கொடுத்த ஐடியா..

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையேயான வார்த்தைப் போர் முற்றியுள்ள நிலையில், தவெக நிர்வாகி லயோலா மணியின் சமீபத்திய பேச்சு வைரலாகி வருகிறது. திமுக அரசு வழங்கும் உதவித் தொகையை தவெக தொண்டர்கள் தயக்கமின்றி வாங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அது நம்ம காசு” – லயோலா மணி அதிரடி:
சமீபத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய லயோலா மணி, திமுக அரசு வழங்கும் 3,000 ரூபாய் உதவித் தொகையை தான் ஏற்கனவே வாங்கிவிட்டதாகக் கூறினார்.

அவர் பேசுகையில், “தீயசக்தி திமுக கொடுக்குற காசுனு நம்ம பசங்க (தவெக தொண்டர்கள்) வாங்காம இருக்காங்க. அது அவங்க காசு இல்ல தம்பிங்களா.. எல்லாம் நம்ம காசு தான். வரிப்பணமா நாம கட்டுனதுதான் நமக்கே வருது. இந்த நேரத்துல மானம், சூடு, சொரணைலாம் பாக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு விடுத்த கோரிக்கை:
மேலும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு அதிரடி கோரிக்கையையும் அவர் வைத்தார். “3 ஆயிரம் போதாது.. கூட ஒரு 3 ஆயிரம் சேத்து 6 ஆயிரமா கொடுங்க ஸ்டாலின் அவர்களேனு கேளுங்க, அதுல தப்பே கிடையாது. தோள்ல நம்ம தவெக துண்ட போட்டுட்டு போய் தைரியமா வாங்குங்க” எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

பரபரக்கும் அரசியல் களம்:
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆளுங்கட்சியான திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் லயோலா மணி, அதே சமயம் அரசு வழங்கும் பணத்தை “மக்கள் பணம்” என்ற அடிப்படையில் வாங்கச் சொல்வது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது எக்ஸ் மற்றும் முகநூல் தளங்களில் வைரலாகி வரும் நிலையில், திமுக ஆதரவாளர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசுத் திட்டங்களை விமர்சனம் செய்துவிட்டு, அதே திட்டத்தின் பயன்களைப் பெறுமாறு தூண்டுவது முரண்பாடானது என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment