tech news
நடுவழியில் கார் டயரில் காற்று இல்லாமல் போய்விட்டதா…? கவலை வேண்டாம் வந்துவிட்டது ஏர்மோட்
கார் மற்றும் டூவீலர் ஓட்டுபவர்களுக்கு அடிக்கடி பழுதாகுவது டயர் மற்றும் டியூப்கள் தான். இதற்கு மிக முக்கியமான காரணம் டியூப்பில் சரியான அழுத்தத்தில் காற்றை அடைத்துப் பராமரிக்காதது தான்.
சிலர் அரைக் காற்றில் தான் எப்போதும் வண்டி ஓட்டுவார்கள். இது டயர் தேய்மானத்தை அதிகரிப்பதோடு மட்டும் அல்லாமல் டியூப்பின் ஆயுளையும் குறைக்கும்.
இதற்கு நம்மிடம் எந்த ஒரு டிவைஸ்சும் இல்லாததும் ஒரு காரணம். எதற்கெடுத்தாலும் கடைகளுக்கும், ஒர்க்ஷாப்பிற்கும் போக நேரமில்லாதவர்களுக்கு இது ஒரு பயனுள்ள கருவி. நடுவழியில் காற்று இல்லாமல் உங்கள் வாகனம் பழுதாகி விட்டாலும் இனி கவலைப்படத் தேவையில்லை.
கையடக்கமான ஏர் மோட்டா கருவி இப்போது வந்து விட்டது. உங்கள் சிரமத்தை எளிதில் குறைத்து உங்கள் வாகனத்திற்கு தகுந்த பாதுகாப்பை வழங்குவதில் உத்தரவாதம் கொடுக்கிறது.
சரியான காற்றழுத்தம் இருந்தால் தான் உங்கள் வாகனங்களின் டயர்கள் நல்ல மைலேஜைக் கொடுக்கும். அது சைக்கிளாக இருந்தாலும் இதுதான் விதி. இந்த காற்றைப் பராமரிக்கத் தவறினால் எரிவாயுவிற்கும், டீசலுக்கும், பெட்ரோலுக்கும் தான் நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
மேலும் குறைந்த காற்றழுத்தத்துடன் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானதும் கூட. எப்போது பஞ்சராகும் என்றே தெரியாது. கடைகளில் போய் காற்றடைப்பதை சிலர் விரும்ப மாட்டார்கள். இது அவர்களுக்கு எரிச்சலைத் தரும் ஒரு விஷயமாகி விட்டது. சிறிய கையடக்கக் கருவியான ஏர்மோட்டோ எளிதில் உங்கள் வாகனத்திற்கு தேவையான அழுத்தத்துடன் காற்றை நிரப்புகிறது.
இதைக் கொண்டு பைக், கார், சைக்கிள், கூடைப்பந்துகள், கால்பந்துகள், பொம்மைகள் என எதற்கு வேண்டுமானாலும் காற்றை நிரப்பிக் கொள்ளலாம். எளிதாக வேலை செய்யும் கருவி. நம்மால் ரொம்பவே ஈசியாகவும் கையாள முடியும்.
நமக்கு ரொம்பவும் வசதியான கருவியாக எங்கு சென்றாலும் எளிதில் தூக்கிச் செல்ல முடிகிறது. அவசரத் தேவைக்கு உறுதுணையாக உள்ளது இந்த ஏர் மோட்டோ.