ஆட்டம் ஆரம்பம்! தளபதிக்கு கிடைச்சது சின்னம்.. இனி தமிழ்நாடு முழுக்க சத்தம் தெறிக்க போகுது..

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இதில் மிக முக்கியமான நகர்வாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ‘விசில்’ சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கி அதிரடி காட்டியுள்ளது.

தவெக கேட்ட சின்னம்:
தவெக ஒரு பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், 234 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட ‘பொதுச் சின்னம்’ கேட்டு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது. ஆட்டோ, கிரிக்கெட் மட்டை மற்றும் விசில் என மூன்று முக்கிய விருப்பங்களை முன்வைத்த நிலையில், இறுதியில் ‘விசில்’ சின்னத்தையே தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

ஏன் ‘விசில்’?
விஜய்யின் ‘பிகில்’ படத்திற்கும் விசில் சத்தத்திற்கும் இருக்கும் கனெக்ஷன் ஊரே அறிந்தது. தியேட்டர்களில் விஜய் படங்களுக்குப் பறக்கும் விசில் சத்தம், இப்போது வாக்குச்சாவடிகளிலும் எதிரொலிக்கும் எனத் தொண்டர்கள் குஷியாகிவிட்டனர். “இது எளிதில் மக்களிடம் போய்ச் சேரும், பிரச்சாரத்திற்கு செம மாஸா இருக்கும்” என நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

களம் காணும் தவெக:
ஏற்கனவே விஜய் தனது முதல் மாநாட்டின் மூலம் அரசியலில் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தார். இப்போது சின்னமும் கிடைத்துவிட்டதால், 2026-ல் திமுக, அதிமுக-வுக்குப் போட்டியாக ஒரு வலுவான ‘தேர்ட் பார்ட்டி’ ஆக தவெக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இனி தமிழ்நாடு முழுக்க விசில் சத்தம் தெறிக்கும்!” என தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Comment