மகளிர் உதவி தொகை 5 ஆயிரம் கிரெடிட்!.. அதிரடி காட்டிய முக ஸ்டாலின்!..

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உதவி தொகையாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு கொடுக்கும் என திமுக சொன்னது. அதே நேரம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் அந்த தொகையை மகளிருக்கு கொடுக்கப்படவில்லை. அதன்பின் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்க கொடுக்க துவங்கினார்கள்.. தற்போது அதன் நடைமுறையில் இருக்கிறது..

இந்நிலையில்தான், மகளிர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் பெற்று வந்த எல்லா பெண்களுக்கும் இன்று காலை வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆனது. தேர்தல் வந்துவிட்டால் மகளிர் உதவி தொகை கொடுக்க முடியாது.. ஏனெனில், தேர்தல் ஆணையம் அதற்கு தடை விதித்து விடும் என்பதால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 3 ஆயிரம் மற்றும் கோடை விடுமுறை ஊக்கத்தொகை 2 ஆயிரம் என சேர்த்து மொத்தம் 5 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவித்திருக்கிறார்.

மூன்று மாதங்கள் மகளிர் தொகை முடக்கினால் பெண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.. சுமார் ஒரு கோடி 31 லட்சம் பேர் பயனடைவார்கள் என முதல்வர் கூறியிருக்கிறார்.

Leave a Comment