ஸ்டாலின் மிசா கைதியா? அல்லது மிசா காலத்தில் வேறொரு குற்றத்திற்காக கைதானவரா என்பதை தெரிந்து கொள்ள ஒரே ஒரு வழி உள்ளது.. அதுதான் டிடென்ஷன் காப்பி.. இந்த காப்பி இருந்தால் ஸ்டாலின் எதறாக கைது செய்தார் என்ற உண்மை தெரிந்துவிடும்..

 

ஸ்டாலின் மிசா கைதியா? அல்லது மிசா காலத்தில் வேறொரு குற்றத்திற்காக கைதானவரா என்பதை தெரிந்து கொள்ள ஒரே ஒரு வழி உள்ளது.. அதுதான் டிடென்ஷன் காப்பி.. இந்த காப்பி இருந்தால் ஸ்டாலின் எதறாக கைது செய்தார் என்ற உண்மை தெரிந்துவிடும்.. ஆனால் 1989, 1996, 2006ல் திமுக ஆட்சியில் இருந்ததால் அந்த காப்பியை அழித்திருப்பார்களோ? ஒருவேளை அந்த காப்பி வெளியே வந்தால் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்..

நேற்று சட்டப்பேரவையில் முக்கிய விவாதப் பொருளாக பார்ட்டி ஃபண்டும், மிசாவும் இடம்பெற்றன. 1976-ஆம் ஆண்டு ஸ்டாலினுக்கு 23 வயதாக இருந்தபோது, அவர் தனது திருமண வாழ்க்கையைத் தொடங்கினார். அதே காலகட்டத்தில், 1976 ஜூன் 31 அன்று மத்திய காங்கிரஸ் அரசால் திமுக அரசாங்கம் கலைக்கப்பட்டது. 1971 மற்றும் 1973 போராட்டங்களின் தாக்கத்தால் விலைவாசி உயர்ந்ததும், 1974 குஜராத் மாணவர் போராட்டங்களும் நாடு முழுவதும் எதிரொலித்ததால் மிசா மற்றும் அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இந்த அவசரநிலை மற்றும் மிசா சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டனர். 1975 முதல் 1977 வரை இரண்டு ஆண்டுகள் நாடு மிசாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த காலக்கட்டத்தில் மிசாவை எதிர்த்துப் போராடி கைதானவர்களின் கைது ஆணையில் அதுகுறித்து தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

ஆனால், அந்த இரண்டு ஆண்டுகளில் பெண்களைத் தொந்தரவு செய்யும் வழக்குகளிலோ அல்லது வேறு முறைகேடுகளிலோ கைதானவர்கள் என்றால், அதற்கேற்பவே அந்த ஆவணத்தில் பதிவிடப்பட்டிருக்கும். ஸ்டாலின் எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதை அறிய அவரது டிடென்ஷன் காபியைப் பார்க்க வேண்டும், ஆனால் 1989-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஷா கமிஷன் அறிக்கையிலும் மிசாவை எதிர்த்துப் போராடித் துன்புறுத்தப்பட்டவர்கள் பட்டியலில் ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை. அவர் உண்மையாகவே மிசாவிற்கு எதிராகப் போராடித் கைது செய்யப்பட்டிருந்தால், அதற்கான உண்மையான டிடென்ஷன் காபி எங்கே என்ற கேள்வி எழுகிறது.

தங்களுக்கு எந்தத் தவறும் இல்லையென்றால் கே.நேரு மீதான கோடிக்கணக்கான ஊழல் முறைகேடு வழக்குகளின் எஃப்.ஐ.ஆர் ஏன் ஈ.டி வெளியிட வேண்டும் மற்றும் டாஸ்மாக் வழக்குடன் தொடர்புடைய அத்திஷா ஏன் துபாய்க்குத் தப்பியோட வேண்டும்? மடியில் கனமில்லாதவர்கள் எதற்காக ஆதாரங்களை அழிக்க வேண்டும் அல்லது ஓடி ஒளிய வேண்டும் என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இதுவரை திருவாரூர் குடும்பம் நாட்டுக்காகத் தியாகம் செய்த போராளி குடும்பம் என்று நம்பி ஏமாந்த உடன்பிறப்புகள் இனிமேலும் ஏமாறக் கூடாது.

Leave a Comment