இனி TNPSC மூலம் தான் எல்லா வேலைக்கும் ஆள் எடுக்கப்படும்.. நகராட்சி துறையில் வேலைக்கு ஆள் தேவை என்றால் கூட TNPSC தேர்வு எழுதனும்.. தகுதியுள்ளவர்களுக்கு வேலை உடனே கிடைக்கும்.. இனி ரெகமெண்டேஷன் இல்லை.. இடைத்தரகர்கள் இல்லை.. எல்லாமே வெளிப்படை.

 

இனி TNPSC மூலம் தான் எல்லா வேலைக்கும் ஆள் எடுக்கப்படும்.. நகராட்சி துறையில் வேலைக்கு ஆள் தேவை என்றால் கூட TNPSC தேர்வு எழுதனும்.. தகுதியுள்ளவர்களுக்கு வேலை உடனே கிடைக்கும்.. இனி ரெகமெண்டேஷன் இல்லை.. இடைத்தரகர்கள் இல்லை.. எல்லாமே வெளிப்படை.. இனி அரசு வேலை என்பது ரொம்ப ஈசி.. நல்லா தேர்வு எழுதுனா அரசு வேலை உறுதி.. ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க வேண்டாம்.. இது தான் இளைஞர்களுக்கான அரசு.. இதுதாண்டா மாற்றம்…

 

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பணியாளர் தேர்வு முறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (கூடுதல் செயல்பாடுகள்) திருத்தச் சட்டம், 2026 (2026-ஆம் ஆண்டின் சட்டம் எண் 21) கடந்த சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தற்போது அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த உள்ளூர் அளவிலான தற்காலிக மற்றும் தனிப்பட்ட தேர்வு முறைகள் இதன் மூலம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இனி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான காலிப்பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் மாநில அளவில் ஒரே சீரான தேர்வு செயல்முறை மூலமாக தேர்ந்தெடுக்கப்படும்.

இந்த புதிய சீர்திருத்தத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையும், முழுமையான தகுதியும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தரப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் மற்றும் பொதுவான போட்டி தேர்வுகள் நடத்தப்படுவதால் தகுதியான விண்ணப்பதாரர்கள் எவ்விதத் தடையுமின்றி அரசுப் பணிக்கு வர ஏதுவாகும். இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் பெற்றுத் தரும் பொன்னான வாய்ப்பாக அமையும்.

பொதுவான போட்டித் தேர்வுகள் மற்றும் தரமான மதிப்பீட்டு முறைகள் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள், தேர்வர்களின் திறனை பன்மடங்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு துறைகளின் கீழ் பரவலாக இருந்த காலிப்பணியிடங்கள் இனி TNPSC குடையின் கீழ் ஒருங்கிணைக்கப்படுவதால், தேர்வாணையத்தின் பல்வேறு தொகுதித் தேர்வுகள் மற்றும் பதவிகளுக்கான ஒட்டுமொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும்.

இந்த சட்டத் திருத்தம் ஆளுநர் அவர்களின் ஒப்புதலை பெற்று கடந்த செப்டம்பர் 13, 2026 அன்று தமிழ்நாடு அரசு அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக துறையின் சட்ட விதிகளை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதன் ஊடாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகக் கட்டமைப்பும், மனிதவள மேம்பாடும் புதிய உயரத்தை எட்டும் என்பதில் சந்தேகமில்லை. வேலைவாய்ப்பிற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான இந்த அதிரடி நடவடிக்கை தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment