இனிமேல் ஈவிஎம் மிஷினில் கோளாறு என்று சொல்லமுடியாது.. யாரும் நம்ப மாட்டார்கள்.. அதனால் SIR மீது பழிபோடும் தோத்துப்போன கட்சிகள்.. தேர்தல் ஆணையரை ராஜினாமா செய்ய சொல்வதற்கு ராகுல் காந்தி யார்? அவர் சொன்னால் உடனே ராஜினாமா செய்திடனுமா?

இனிமேல் ஈவிஎம் மிஷினில் கோளாறு என்று சொல்லமுடியாது.. யாரும் நம்ப மாட்டார்கள்.. அதனால் SIR மீது பழிபோடும் தோத்துப்போன கட்சிகள்.. தேர்தல் ஆணையரை ராஜினாமா செய்ய சொல்வதற்கு ராகுல் காந்தி யார்? அவர் சொன்னால் உடனே ராஜினாமா செய்திடனுமா? முறைகேடு நடந்ததற்கு ஆதாரம் இருந்தால் கோர்ட்டுக்கு போங்க.. தோத்து போன நீங்க இருக்க சொன்னா இருக்கனும், ராஜினாமா செய்ய சொன்னா செய்யனுமா? 3 தேர்தலில் தோற்றுபோய் ஆட்சியை பிடிக்க வக்கில்லை.. பேச்சு வேற.. முடிந்தால் ஜெயிச்சு அதன்பின் தலைமை தேர்தல் ஆணையரை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு அமைதியா இருங்க…

 

தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வராத போதெல்லாம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழியைப் போடுவது எதிர்க்கட்சிகளின் வழக்கமான பாணியாக இருந்து வந்தது. அதை உச்சநீதிமன்றமே பலமுறை தலையில் கொட்டி நிராகரித்த நிலையில், இப்போது புதிதாக வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் விவகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் லாபம் தேட முற்படுகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொண்டது அந்தந்த மாநில அரசின் அதிகாரிகளும் ஊழியர்களுமே ஆவர். மத்திய அரசு அல்லது பாஜக ஏதோ முறைகேடு செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள், அதே SIR முறைப்படி தேர்தல் நடைபெற்ற தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பாஜக அல்லாத பிற கட்சிகளோ அல்லது புதிய சக்திகளோ வெற்றி பெற்றதை எப்படி விளக்குவது என்ற கேள்வியைக் கடந்து செல்கின்றன.

தமிழ்நாட்டில் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொண்டது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள், ஆட்சியர்கள், ஆர்டிஓ மற்றும் வட்டாட்சியர்கள் தான். தேர்தல் ஆணையத்திற்கு என்று தனியாக நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கிடையாது; மாநில அரசு ஊழியர்களைக் கொண்டே தேர்தல் பணிகளும் வாக்காளர் பட்டியல் பணிகளும் நடத்தப்படுகின்றன. அப்படி இருக்கும்போது, SIR நடைமுறையில் தவறு நடந்துள்ளது என்று திமுக வாதிட்டால், அது அவர்கள் சொந்த ஆட்சியில் இருந்த அரசு இயந்திரத்தையும் அதிகாரிகளையுமே குற்றம் சாட்டுவதற்குச் சமமாகும். ஆனால் அதை நேரடியாகச் சொல்லத் தயங்கும் தலைவர்கள், ஒட்டுமொத்தப் பழியையும் மத்திய அரசின் மீது தூக்கிப் போட முயல்வது அப்பட்டமான அரசியல் நாடகமாகும்.

கேரளாவில் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறிய பிறகும் அங்கு தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்தது..SIR முறைகேடு செய்து காங்கிரஸ் ஜெயிக்கவா பாஜக செய்யும். ; அதேபோல மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடைமுறைகளில் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணிக்கு சாதகமாக SIR நடத்தப்பட்டிருந்தால், தவெக வெற்றி காண முடிந்தது எப்படி என்ற நியாயமான கேள்வி எழுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகள் வெற்றி பெறக்கூடிய ஒரு சூழல் இருக்கும்போது, SIR மூலமாக ஏதோ ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சாதகமாகச் செயல்பட முடிந்தது என்ற கூற்றில் எந்தவித தர்க்க ரீதியான உண்மையும் இல்லை.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்து, தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் முடிவடைந்து பல மாதங்கள் கழிந்த பிறகு இப்போது இந்த விவகாரத்தைக் கிளப்புவது திட்டமிட்ட அரசியல் பிரச்சாரமே தவிர வேறில்லை. ராகுல் காந்தி முதல் உள்ளூர் தலைவர்கள் வரை ஆரம்பத்தில் பிஹார் தேர்தலுக்குப் பிறகு பயந்து எதிர்த்தாலும், தேர்தல் நடக்கும் வரை இது குறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்தனர். பின்னர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் மீண்டும் பழையபடியே ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கிளப்பி செய்திகளில் இடம்பிடிக்க முயல்கிறார்கள். மக்களின் கவனத்தை உண்மையான வளர்ச்சிக்கான பாதையிலிருந்து திசைதிருப்புவதே இத்தகைய தொடர் குற்றச்சாட்டுகளின் முதன்மை நோக்கமாகும்.

வரலாற்ற திரும்பிப் பார்த்தால், தேர்தல் ஆணையத்தின் சுயாதீனமான அதிகாரங்களைக் குறைத்த வரலாறும், டி.என்.சேஷன் போன்ற நேர்மையான அதிகாரிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கூடுதல் ஆணையர்களை நியமித்த வரலாறும் காங்கிரஸுக்கே உண்டு. நவீன் சாவ்லா போன்ற அதிகாரிகளின் காலத்தில் தேர்தல் ஆணையம் எவ்வாறு செயல்பட்டது என்பது இன்றளவும் மக்கள் மன்றத்தில் விவாதப் பொருளாகவே உள்ளது. ஜனநாயகத்தைப் பற்றிப் பேசும் இவர்கள், தங்களுக்கு சாதகமான சூழல் இல்லாதபோது ஜனநாயக அமைப்புகளின் மீது சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் விதைப்பதையே வேலையாகக் கொண்டுள்ளனர்.

இறுதியாக, எதிரெதிர் துருவங்களாகக் காட்டிக்கொள்ளும் கட்சிகள் கூட தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்துவதில் ஒன்று சேர்ந்து செயல்படுவதைப் பார்க்க முடிகிறது. ஒருவர் போராட்டத்தைத் தொடங்கினால் மற்றொருவர் அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவித்து மாறி மாறி அறிக்கைப் போர் நடத்துவது இவர்களது அரசியல் உத்தியாக மாறியுள்ளது. மக்கள் நலனில் உண்மையான அக்கறை இல்லாமல், மத்திய அரசின் செயல்பாடுகளை எப்போதும் தற்காப்பு நிலையில் வைப்பதற்காகவே இத்தகைய போலி விவாதங்கள் உருவாக்கப்படுகின்றன. அடிப்படை தர்க்கமும் ஆதாரமும் இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு நிராகரிப்பார்கள்.

Leave a Comment