health tips
லேப்டாப், மொபைல் அதிகம் பார்ப்பவரா நீங்கள்..இதோ உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிகள்..
இந்த காலத்தில் மொபைல் பார்க்காதவர்கள் என எவருமே கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே மொபைல் உபயோகப்படுத்துகின்றனர். சிலர் தங்களது வேலைக்காக கணினி மற்றும் லேப்டாப் என பலவற்றை உபயோபடுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் நாம் நமது கண்களை பாதுகாப்பது என்பது மிகவும் இன்றியமையாததாகும். நாம் தினமும் யோகா மற்றும் டிஜிட்டல் திரைகளை பார்ப்பதில் இருந்து இடைவேளை எடுப்பது என சில செயல்களை செய்வதின் மூலம் நமது கண்களை பாதுகாக்கலாம். அவை என்னென்ன என பார்க்கலாம்.
யோகாசனங்கள்:
யோகாவில் உள்ள சில எளிய வழிகளை பின்பற்றுவதின் மூலம் நாம் நமது கண்களை பாதுகாக்கலாம். கண் சுழற்சி, கண்களை சிமிட்டுதல் என சில எளிய யோகாக்களை செய்வதன் மூலம் நமது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
தொடர்ச்சியான திரை இடைவேளை:
அதிக நேரம் டிஜிட்டல் திரையினை பார்ப்பதனால் கண்களுக்குள் ஒரு வித அழுத்தம் உருவாகிறது. இதனை போக்குவதற்கு 20-20-20 விதிமுறைகளை பின்பற்றினால் நல்லது. இதன்படி ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் நமது சுற்றி 20 அடி தூரமுள்ள பகுதிகளை 20 நொடிகள் பார்ப்பதால் நமது கண்கள் சற்று ஒய்வு பெறும். இதன் மூலம் நமது கண்களை பாதுகாக்கலாம்.
சரிவிகித உணவு முறை:
சரிவிகித உணவு முறைகளை கையாள்வதின் மூலம் நாம் நமது கண்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கலாம். விட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள் உள்ள உணவு வகைகளை உண்பதின் மூலமும் கேரட், சிட்ரஸ் பழங்கள், கீரை வகைகள், பருப்புகள், மீன் போன்றவற்றை நமது அன்றாஅட உணவில் சேர்ப்பதின் மூலமும் நமது கண்களை பாதுகாக்கலாம்.
அதிக நீர் அருந்துவது:
நமது உடம்பில் உள்ள நீர்சத்துகளை குறைய விடாமல் பாதுகாத்து கொள்வது ஒரு மிக சிறந்த வழிமுறையாகும்.
முறையான கண் பரிசோதனை:
டிஜிட்டல் திரைகளை பார்ப்பவர்கள் அவ்வபோது முறையான கண் பரிசோதனை செய்வதின் மூலமும் நமது கண்களை பாதுகாத்திடலாம்.