Connect with us

latest news

செம மாஸ்சாக களமிறங்கும் poco f5 5g மொபைல்.. இது midrange போன்களின் விற்பனையை காலி பண்ணுமா?

Published

on

poco f5 5

 

ரெட்மியின்(redmi)கீழ் சப்பிராண்டுடாக(sub brand)இயங்கும் போக்கோ(poco)தனது புதிய 5g மொபைலை வெளியிட்டுயிருக்கிறது. இதில் போக்கோ எஃப்5(poco f5) மற்றும் போக்கோ எஃப்5 ப்ரோ(poco f5pro)என இரு மாடல்களையும் உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் அடங்கிரும் சிறப்பம்சங்கள் தற்போது விற்பனையில் இருக்கும் போன்களை எல்லாம் ஒரங்கட்டும் அளவிற்க்கு உள்ளது. இது வருகிற 16-5-2023 அன்று விற்பனைக்கு வரவிருக்கிறது.

poco f5 5g 2

poco f5 5g 2

*ப்ராஸசர்(processor):

poco f5 5g

poco f5 5g

இதில் ஸ்னாப்டிராகன்(snapdragon)7gen2, ப்ரோ வேரியண்டில் ஸ்னாப்டிராகன்(snapdragon)8gen1 என்றழைக்க படக்கூடிய அதிநவீன ப்ராஸசர்கள்(processor) பயன்படுத்தப்படுகிறது. 1மில்லியனுக்கு மேல் அன்டூடூ(antuttu) மதிபெண்களை பெற்றுள்ளது. அதனால் பல செயலிகளை ஓரே நேரத்தில் பயன்படுத்தினாலும் போனின் வேகமாக இருக்கும். உபயோகிக்கும் போது வாடிக்கையாளர்க்கு இடையுரு ஏற்படாமல் மென்மையாக செயல்படும்.

*டிஸ்ப்ளே(display):

display

display

6.67-ல் Full hd+ amoled டிஸ்ப்ளேவை(display) கொண்டுள்ளது. 1000nits (peak britness)உச்ச கட்ட வெளிச்சத்தில் ஒளிரக்கூடியது. இதனால் அதிக வெயில் படக்கூடிய இடத்திலிலும் சுலபமாக பார்க்க முடியும். டால்ஃபின் விஷன் சப்போர்ட்டையும்(Dolphin Vision Support)கொண்டுள்ளது.

* போக்கோ எஃப்5(poco f5)யின் சிறப்பம்சங்கள் :

இதில் இதுவரை எந்த போனில் இல்லாத அளவிற்க்கு மொபைல் கேம் விளையாடுவதற்கு சிறப்பாக ”hyperboost gaming” என்னும் வசதியை அறிமுகம் செய்கிறது. இது போனில் உள்ள மென்பொருள் மற்றும் வன்பொருளை மேம்படுத்தி ரேம் (ram) மூலம் எவ்வித தொய்வும் இன்றி நிலையாக வைக்கிறது. மற்றும் நீடுத்து உழைக்க கூடிய 5ஜி வைஃபை(wifi) ஆன்டனா(antana) உள்ளது.

poco f5

poco f5

இது கேம் விளையாடும் பொழுது தடையில்லா தொடர்பை வழங்க இது உதவியாக இருக்கும் என்று நிறுவனத்தின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இப்படி தொடர்ச்சியாக கேம் விளையாடும் போது போன் வேகமாக வெப்பமாதலை தடுக்க 14 அடுக்கு குளிரூட்டும் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. வலது பக்க கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது .

*கேமிரா(camera):

poco f5 5g

poco f5 5g

பின்புரம் 64 mp ois வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் 4k30fps வீடியோக்களை எடுக்க முடியும். இதன் புகைபடம் மிகவும் தெளிவாக உள்ளது. முன்பக்க கேமிரா 16mp கொண்டுள்ளது. மேலும் பல புதிய வழி முறைகளையும் உள்ளடக்கியுள்ளது. 8mp அல்ட்ரா ஒய்டு (ultra wide) மற்றும் 2mp மேக்ரோ (macro) லென்சை கொடுக்கப்பட்டுள்ளது.

* சார்சர் (charger):

poco f5 5g

poco f5 5g

5000mah பேட்டரி (battery)கொண்டு 67w மூலம் சார்ச் (charge) செய்யப்படுகிறது.

ip53 மதிப்பீடு நீர் மற்றும் தூசுலிருந்து காக்கப்டுகிறது. அருமையான தெறிக்கும் சத்தம் கொண்ட ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இரண்டு வருட ஓ.ஸ்(OS) புதுப்பிப்பு மற்றும் 3 வருட பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இதன் விலை 8+256ஜிபி 30000 மற்றும் 12+256ஜிபி-ன் விலை 35000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

india

பாட்டு பாடவா, பாடிகிட்டே டீயும் போடவா… பாடிக்கொண்டே டீ போட்ட வியாபாரி… வைரலாகும் வீடியோ…!

Published

on

டீ வியாபாரி ஒருவர் தனது கடையில் பாட்டு பாடிக்கொண்டே டீ போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இன்றைய தலைமுறையினர் இடையே சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துவிட்டது எங்க பார்த்தாலும் மக்கள் போனை வைத்துக்கொண்டு வீடியோ ரீல்ஸ் என்று எடுத்து அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.  சிறு சிறு வியாபாரிகள் கூட தங்களை பிரபலமாக்கிக் கொள்வதற்காக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நாகூரை சேர்ந்த டீ வியாபாரி ஒருவரின் கடைக்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் வந்த வீடியோ மிகப்பெரிய வைரலானது. அதைத் தொடர்ந்து மற்றொரு டீ வியாபாரி ரஜினி ஸ்டைலில் கிளாஸை வீசி வீசி பிடித்து டீ போடும் வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது சூரத்தை சேர்ந்த ஒரு டிவி வியாபாரியும் புதுவிதமாக ஒரு முயற்சியை மேற்கொண்டு இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

அவர் பாட்டு பாடிய படியே டீ போடும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. மும்பையை சேர்ந்த பயாணி என்கின்ற புகைப்படக் கலைஞர் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கின்றார். சூரத்தில் உள்ள ஒரு பகுதியில் டீக்கடை நடத்தி வரும் விஜய் பாய் பட்டேல் என்பவர் இந்தி பாடல் ஒன்றை ஒரு கையில் மைக்கு பிடித்து, பாடியப்படியே மற்றொரு கையில் டீ தயாரிக்கின்றார்.

கடையில் தேநீர் பருகும் வாடிக்கையாளர்கள் அவரின் பாட்டை ரசித்தப்படியே டீ குடிக்கிறார்கள். அவர் பாடிய பாடலும் அவரது குரலும் கேட்பவர்களுக்கு மிகவும் இனிமையாக இருந்தது. இந்த வீடியோவை அந்த புகைப்படக் கலைஞர் பதிவிட்ட ஒரு மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

google news
Continue Reading

latest news

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணியா…? சென்னை காவல் ஆணையர் சொன்ன தகவல்…!

Published

on

தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் நேற்று இரவு பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ராஜாஜி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காலை முதலே பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவாளர்கள் தொண்டர்கள் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் தெரிவித்திருந்ததாவது “ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக செம்பியன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் புலன் விசாரணையை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக எந்த தகவலும் இல்லை.

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற அடிப்படையில் அவரை உளவுத்துறையினர் கண்காணித்து வந்தன. தேர்தல் நடத்தை விதி காரணமாக அவரிடம் இருந்து பெறப்பட்ட துப்பாக்கியை கடந்த ஜூன் 13ஆம் தேதி தான் ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்றார். இவர் மீது ஏழு வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுக்கப்பட்டுள்ளார். தற்போது வரை நடத்திய விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை.

அரசியல் பழிக்கு பழியாக இந்த கொலை நடக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் யாரும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. தற்போதைய தகவல் படி ஜாதிய காரணங்களுக்காக அவர் கொலை செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகு கொலைக்கான காரணம் தெரிய வரும். சென்னையில் தற்போது கொலை மற்றும் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது. சென்னை மிகவும் பாதுகாப்பான நகரம் தான்” என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்

google news
Continue Reading

india

சினிமா, அரசியல், கிரிக்கெட் பிரபலங்களால் ஜொலித்த… அனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் பங்க்ஷன்…!

Published

on

அம்பானியின் மகனான ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக பணக்கார பட்டியல்களில் டாப் இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அதேபோல் மகள் ஈஷா அம்பானிக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இவரின் கடைக்குட்டி ஆனந்த் அம்பானிக்கு தான் தற்போது திருமணம் நடைபெற உள்ளது.

கிட்டத்தட்ட பல மாதங்களாக இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். கடந்த சில மாதங்களாகவே ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமண நிகழ்ச்சிகள் களைகட்டி வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிரீ வெட்டிங் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ராம்சரண், ஷாருக்கான், அமீர்கான் என பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்நிலையில் நேற்று ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகிலேயே பிரபலமான பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாடி அசத்தியிருந்தார். மேலும் பல நடிகர்கள் நடனமாடி சங்கீத் நிகழ்ச்சியை கோலாகலபடுத்தியிருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் நிகழ்ச்சிக்கு பாலிவுட்டை சேர்ந்த ரன்பீர் கபூர் ஆலியா பட், தீபிகா படுகோன் ரன்வீர் சிங், அட்லீ பிரியா, காஜல் அகர்வால், சல்மான்கான், திசா பதானி, ஜான்விகபூர், மாதிரி தீட்சி, வித்யா பாலன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்திருந்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வீரர்களான நிஷான் கிஷான், குர்னால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, தோனி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்.

google news
Continue Reading

latest news

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Published

on

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு சென்னையில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மலைக்கு வாய்ப்புள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மலையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

google news
Continue Reading

india

2024-25 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்… தேதியை அறிவித்த மத்திய அரசு…!

Published

on

2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற ஜூலை 23ஆம் தேதி 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றார். வரும் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்துல நடைபெற இருக்கின்றது.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் மூன்றாவது முறையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் 3-வது முறையாக பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.

google news
Continue Reading

Trending