Connect with us

health tips

எந்த காரணம் கொண்டும் இந்த பொருட்களை தயிருடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்..

Published

on

curd

தயிர் என்பது வெயில் நேரத்தில் நாம் அனைவரும் விரும்பும் ஒரு உணவாகும். இதனை மோர் வடிவிலோ அல்லது தயிராகவோ நாம் பயன்படுத்துகிறோம். இது நமது வயிறுக்கு தேவையான சில நல்ல பாக்டீரியாக்களை நமக்கு அளிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் நாம் சாப்பிடும் உணவினை செரிமானமாக்க பயன்படுகிறது. மேலும் இது நாம் சாப்பிடும் உணவிலிருந்து நமக்கு தேவையான சத்துகளை உறிஞ்சவும் உதவுகிறது. தயிரில் நமது உடலுக்கு தேவையான விட்டமின்கள் மினரல்களும் அடங்கியுள்ளதால் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது. இப்படிப்பட்ட தயிரை நாம் சில உணவு பொருளுடன் சாப்பிடுவது நமக்கு மிகுந்த பாதிப்பை விளைவிக்கும்.

மீன்:

avoid fish with curd

avoid fish with curd

மீன் மற்றும் தயிர் இரண்டிலும் சம அளவு புரோட்டீன் இருப்பதால் இவை இரண்டையும் நாம் சேர்த்து சாப்பிடுவது நமது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். விலங்கு புரதம் மற்றும் காய்கறி புரதம் இரண்டும் சேரும் பொழுது அவை நாம் சாப்பிடும் உணவினை செரிக்க முடியாதவாறு செய்கின்றன. மேலும் இது நமக்கு வயிறு சம்பந்தமான பல பிரச்சினைகளையும் கொடுக்கின்றன.

எண்ணெயில் பொறித்த உணவுகள்:

avoid curd with oily food

avoid curd with oily food

பரோட்டா, பூரி போன்ற எண்ணெயில் பொறித்த உணவோடு நாம் தயிரை சேர்த்து சாப்பிடுவதால் அது நமது செரிமானத்தை குறைப்பதோடு நமக்கு சோம்பலான உணர்வினையும் தருகின்றது.

மாம்பழம்:

avoid curd with mango

avoid curd with mango

மாம்பழம் இயற்கையாகவே சூடான இயல்பு கொண்டது. இதனை குளிர்ந்த இயல்பு கொண்ட தயிருடன் நாம் சாப்பிடும் பொழுது இவை இரண்டும் சேர்ந்து நன்கு செரிமானமாகாமல் நமக்கு தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை கொடுக்கின்றன. மேலும் இவை இரண்டும் சேர்ந்து நமது உடலுக்கு தேவையில்லாத நச்சு பொருட்களை உடலில் உண்டாக்குகின்றன.

பால்:

dont eat milk with curd

dont eat milk with curd

பாலுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவதின் மூலம் நமக்கு நெஞ்சு எரிச்சல், வயிற்றில் அமிலத்தன்மை அதிகமாதல், வயிறு உப்பிசம் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே நமது உடலை பாதுகாக்க நாம் சாப்பிடும் உணவின் கலவையையும் கவனமுடன் கையாள வேண்டும்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *