latest news
ஆன்லைன் முதலீட்டில் பணத்தினை இழந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்…
ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பால் எவ்வளவுக்கு அதிகமாக நல்லது நடக்கிறதோ? அதே அளவு பிரச்னையும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆன்லைன் கேமில் மட்டுமல்லாமல் முதலீடுகள் செய்கிறேன் எனவும் பெரிய அளவில் தொகையை இழப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் தென்னல் கிராமத்தினை சேர்ந்தவர் விஜயகாந்த்(30). இவருக்கு திருமணமாகி மனைவி வாணி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் வசித்து வருகிறார். விஜயகாந்த் ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் ஏற்பட்டது. தன்னிடம் இருந்த பணத்தினை ஆன்லைனில் போட்டு அதை தொலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் கடன்சுமை அதிகரிக்க நண்பர்களிடம் பெரிய அளவில் தொகையை வாங்கி அதனையும் ஆன்லைனில் இழந்து இருக்கிறார். இது அவருக்கு பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் மனைவி மற்றும் பிள்ளையை அழைத்துக்கொண்டு ஊசுட்டேரி பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு மனைவி மற்றும் குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு அவரும் சாப்பிட்டு இருக்கிறார்.
அதையடுத்து வண்டியை எடுத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் பூங்கா அருகே வந்த போது விஜயகாந்த் மயங்கி வண்டியுடன் மூவரும் கீழே விழுந்து இருக்கின்றனர். அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது விஜயகாந்தின் சட்டை பையில் இருந்த பாக்கெட்டில், எங்களுடைய மரணத்துக்கு காரணம் எம்.எம்.குப்பத்தினை சேர்ந்த பெண் தான்.
ஐந்து லட்சம் கடன் கேட்ட போது என்னிடம் இருந்து நண்பரின் பத்திரத்தினை வாங்கி கொண்டார். ஆனால் காசும் கொடுக்காமல் தற்போது பத்திரத்தினையும் கொடுக்காமல் பிரச்னை செய்கிறார். இதனால் ஐந்து லட்சம் கடன் ஒருபக்கம், நண்பரின் பத்திர கிடைக்காத மன உளைச்சலில் விஜயகாந்த் குடும்பத்துடன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.