india
டெல்லி முடிஞ்ச்சு… மும்பையை காலி பண்ணிய மழை… 6 மணி நேரத்தில் 300 மிமீ…
சமீபகாலமாகவே உலகம் முழுவதிலும் மழையின் அளவு மிக அதிகமாகவே இருக்கிறது. அதிலும் இந்தியாவில் தொடர்ந்து எல்லா மாநிலங்களிலும் மழை கொட்டி தீர்க்கிறது. பெங்களூரை தாண்டி டெல்லியை காலி செய்த நிலையில் தற்போது மும்பையில் அடுத்த ஆட்டத்தினை தொடங்கி இருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் இன்று அதிகாலை ஒரு மணி முதல் காலை 7 மணி வரை மழை விடிய விடிய கொட்டியது. இதில் 6 மணி நேரத்தில் மட்டுமே 300 மிமீ அதிகமாக மழை பெய்தது.
அந்தேரி, குர்லா, பாந்தாரூப், கிங்ஸ் சர்கிள், தாதர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பல இடங்களில் தண்ணி சூழ்ந்தது. அதிலும், தானே பகுதியில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால் மழை பாதிப்பு அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
புறநகர் ரயில் நிலையங்கள் முழுவதும் பல அடிக்கு தண்ணீர் சூழ்ந்து இருப்பதால், 5 ரயில்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில் நிலையம் முழுவதிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. ரயில் போக்குவரத்து மட்டுமல்லாமல் பேருந்து போக்குவரத்தும் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், ஜூலை 10 வரை மும்பை பகுதியில் கனமழை நீடிக்கும் என்றே கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கேரளாவிலும் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.