india
என்னடா அக்கப்போரா இருக்கு..! 100 கிராம் கொத்தமல்லி 131 ரூபாயா…? மக்களுக்கு ஷாக் கொடுத்த நிறுவனம்…!
செப்டோ நிறுவனம் 100 கிராம் கொத்தமல்லிக்கு 130 ரூபாய் விலை போட்டு இருந்ததை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட zepto நிறுவனம் ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா என்ற 2 நண்பர்களால் துவங்கப்பட்ட ஒரு நிறுவனம். பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை 10 நிமிடத்தில் வீடுகளுக்கு டெலிவரி செய்வது இவர்களின் வேலை. மக்களுக்கு நெருக்கம் மிக்க மும்பையில் இந்த நிறுவனம் முதன்முதலாக தொடங்கப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் தற்போது பிரபலமடைந்திருக்கின்றது. அடிக்கடி இதில் ஆபர்களும் அறிவிக்கப்படும். இதனால் zepto ஆப்-பை பின்பற்றி வரும் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஆனால் சமீபத்தில் zepto வில் கொத்தமல்லியின் விலை தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அரியானா மாநிலம் குருகுராமை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் zepto-ல் 100 கிராம் கொத்தமல்லி விலை 131 விற்கப்படுவதை தனது போனில் ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து அதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். கடந்த ஜூலை எட்டாம் தேதி இந்த புகைப்படம் பகிரப்பட்ட நிலையில் உள்நாட்டில் பெறப்பட்ட மற்றும் பிரீமியம் நறுமணக் கொத்தமல்லி கட்டிங் விலை 100 கிராமுக்கு 131 ரூபாய் முதல் 141 ரூபாய் என விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த பதிவில் ‘உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவோம் அவர்கள் வளர உதவுவோம் என்று ஒருவர் கருத்து தெரிவித்திருக்கின்றார். மற்றொருவர் மலிவு மற்றும் அணுகல் ஆகியவற்றிற்கு இடையே ஒரு மெல்லிய கோடு என்று மற்றொருவர் கிண்டல் செய்து இருக்கின்றார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.