Connect with us

india

நகரங்கள்; தேர்வு மைய வாரியாக நீட் ரிசல்ட்… உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published

on

நீட் தேர்வு முடிவுகள் நகரங்கள் வாரியாக நடத்தப்பட்ட தேர்வு மையங்கள் வாரியாக சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் வெளியிடப்பட வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் கைது படலங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்தநிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு முக்கிய உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக முழுமையான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார்.

மேலும், வரும் ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறிய நிலையில், அன்றைய மதியத்திற்குள் வழக்கின் விசாரணையை நிறைவு செய்து விடலாம் என நீதிபதிகள் அறிவித்து, நீட் தேர்வு வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

கவுன்சிலிங் நடைமுறைகளுக்கு இரண்டு மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், வரும் ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவித்தபோது, அதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாத தலைமை நீதிபதி திங்கட்கிழமை வழக்கின் விசாரணை நடைபெறும் என்று மட்டும் கூறினார்.

google news