latest news
திருநங்கையாக ஊக்குவிப்பவர்களை சிறையில் அடைக்க வேண்டும்… எலான் மஸ்க் ஆதங்கம்…
பிரபல இணையதளமான எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் 18 வயதாகும் தன்னுடைய மூத்த மகன் இறந்து விட்டதாக தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
டெஸ்லா நிறுவனத்தினை உருவாக்கிய எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கி அதனை எக்ஸ் என பெயர் மாற்றினார். இதையடுத்து அந்த நிறுவனத்தில் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். எலான் மஸ்க்குடைய முதல் மனைவி ஜஸ்டின் தம்பதிக்கு 2004ம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது.
இதில் ஒருவர் தான் சேவியர். இவர் சமீபத்தில் வோக் மைண்ட் வைரஸால் இறந்துவிட்டதாக எலான் மஸ்க் தன்னுடைய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். வோக் மைண்ட் வைரஸ் என்றால் பாலின மாற்று அறுவைச் சிகிச்சை செய்பவர்களை தான் அதன் எதிர்ப்பாளர்கள் இப்படி குறிப்பிடுகின்றனர்.
அதாவது எலான் மஸ்கின் மகன் உண்மையாகவே இறக்கவில்லை. அவர் தன்னுடைய தந்தை எலானை தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி கையெழுத்து வாங்கி இருக்கிறார். இதை எடுத்து அவர் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறி இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு திருநங்கையாக மாறிய சேவியர் தன்னுடைய பெயரை விவியன் ஜன்னா வில்சன் எனவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்வைதான் தன்னுடைய முதல் மகன் இறந்துவிட்டதாக எலான் பேசி இருக்கிறார். விவியனும் தன்னுடைய தந்தைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் பல இடங்களில் குறிப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.