ருதுராஜை நீக்குனீங்க நீங்க முட்டாள்தான் – இந்திய அணியைத் தேர்வு செய்ததில் தவறு உள்ளதா?.. காட்டமான அஸ்வின்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணியின் தேர்வு குறித்து மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆல்-ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், ஹர்திக் பாண்டியா இல்லாத சூழலில், ஒரு ஆல்-ரவுண்டராகக் கருதப்படும் நிதீஷ் குமார் ரெட்டியை அணியில் ஏன் சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

“ஹர்திக் பாண்டியா இல்லாத நேரத்தில், நிதீஷ் குமார் ரெட்டியை அணியில் சேர்க்காமல் இருப்பது, இந்திய அணியைத் தேர்வு செய்வதில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அவர் ஒரு திறமையான ஆல்-ரவுண்டர்; அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன் என்று புரியவில்லை,” என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் குறித்துப் பேசிய அஸ்வின், அவரை அணியில் இருந்து நீக்குவது குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

“ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாகத் திலக் வர்மாவை சேர்க்க வேண்டும் என்று சொல்வது, எனக்கு அறிவு சார்ந்த விஷயமாகத் தெரியவில்லை. அப்படி யாராவது கூறினால், அவர்களை விட முட்டாள் யாரும் இல்லை,” என்று அஸ்வின் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

“ருதுராஜ் ஒரு சிறந்த வீரர், அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுங்கள். தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படும் போதுதான் அவர் தன்னை நிரூபிக்க முடியும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

அஸ்வினின் இந்தக் கருத்து, இந்திய அணியின் தேர்வு நடைமுறைகள் குறித்து மீண்டும் ஒருமுறை விவாதத்தை எழுப்பியுள்ளது.

Leave a Comment