கிரெடிட் கார்டு இருந்தும் பயன்படுத்தவில்லை என்றால் ஆபத்து… இந்த விஷயங்கள் தெரியுமா?

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. 2025 நிதியாண்டில் இந்த கணக்கு ரூ. 21.16 லட்சம் கோடியை கடக்கும் என்று தெரிகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 15 சதவீதம் வரை அதிகம் ஆகும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பொது மக்கள் மிக எளிதில் பணமின்றி செலவிட முடிகிறது. மேலும், இவ்வாறு செய்வதற்கு பெரிய அளவில் சலுகைகளும் வழங்கப்படுகிறது. முன்னணி கிரெடிட் கார்டுகளில் தள்ளுபடி, மதிப்பீட்டு பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. எனினும், இவை பயனர் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் விதத்தை வைத்தே வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு முறை கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போதும் பயனர்களுக்கு ஏதேனும் சலுகைகள், தள்ளுபடி மற்றும் ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. கிரெடிட் கார்டை மிக குறைந்த அளவில் பயன்படுத்துவோர் எனில், இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் பலன்களை பெருமளவில் பெற முடியாது.

இதுதவிர கிரெடிட் கார்டை தொடர்ச்சியாக பயன்படுத்தவில்லை எனில், உங்களது கிரெடிட் ப்ரோபைல் பாதிக்கப்படும் அபாயமும் அதிகம். பயன்படுத்தாமல் இருக்கும் கிரெடிட் கார்டு ஒருவரின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பயன்படுத்தாத கிரெடிட் கார்டு எப்படி பாதிப்பை ஏற்படுத்தும்?

கிரெடிட் கார்டை அதிகமாக பயன்படுத்தாத நிலையில் இருந்தால், வங்கி அதனை “செயலில் இல்லை” என்று கருதி, உங்கள் கணக்கை மூடலாம். இது உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை (credit utilization ratio) மாற்றி, ஸ்கோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். ஒருவேளை கிரெடிட் கார்டு நிறுவனம் உங்களது பயன்பாட்டு விகிதத்தை குறைக்கவோ அல்லது கார்டை முடக்கினாலோ, பயன்பாட்டு விகிதம் அதிகரித்து கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.

கணக்கு முடக்கப்படுவது உங்கள் கிரெடிட் கணக்கின் சராசரி ஆயுளுக்கு (average credit age) பாதிப்பை ஏற்படுத்தும். குறுகிய காலத்தில் செயல்படாத கணக்குகள், கூடுதல் அபாயத்திற்கு காரணமாக கருதப்படும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கடன் தொகையை திருப்பி செலுத்தியதற்கான வரலாற்றை உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும். பயன்பாடு குறைவாக இருந்தால் கடன் கட்டண வரலாறு (payment history) உருவாகாது. கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல், கட்டண வரலாறு உருவாக பட்சத்தில் அது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாது. இது கிரெடிட் ஸ்கோரை காலப்போக்கில் வெகுவாக பாதிக்கலாம்.

உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு பாதிப்பில்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

சிறிய செலவுகளை சில மாதங்கலுக்கு ஒருமுறை பயன்படுத்தலாம். பின்னர் உடனடியாக பாக்கியைக் கட்டவும். இது வலுவான கிரெடிட் வரலாற்றை உருவாக்க உதவும்.

தானாக கட்டணம் செலுத்தும் வழிமுறையை (auto payment) செயல்படுத்தி வைக்கவும். இது உங்கள் கார்டு செயலில் இருப்பதோடு, பயன்பாட்டை தொடர்ச்சியாக சரிபார்க்க உதவும்.

கார்டில் வருடாந்திர கட்டணங்கள், அல்லது வங்கியின் விதிமுறைகள் ஆகியவற்றை திட்டமிட்டு பரிசீலிக்கவும். கட்டணமில்லா அட்டை என்றால் அதை வைத்துக் கொள்வது நல்லது, மேலும் கிரெடிட் ஸ்கோரை பராமரிக்கவும் உதவும்.

Leave a Comment