ஜூலை 10-ம் தேதியுடன் அடியோடு நிறுத்தம்… தனியார் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்

மிந்த்ரா கோடக் கிரெடிட் கார்டு வருகிற 10-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று கோடக் மஹிந்திரா வங்கி அறிவித்துள்ளது. ரிவார்டு சிஸ்டத்தை ஒருங்கிணைக்கவும், கிரெடிட் கார்டுகளை எளிமையாக்கவும் இந்த மாற்றத்தை செய்வதாக அந்த வங்கி தெரிவித்து இருக்கிறது. இந்த மாற்றம் காரணமாக மிந்த்ரா கோடக் ரூபே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கோடக் லீக் பிளாட்டினம் அல்லது கோடக் ஜென் கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றப்படுவர்.

இதில் கோடக் லீக் கார்டு பிரீமியம் லைஃப்-ஸ்டைல் கார்டாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார்டு அதற்குரிய பலன்கள் மற்றும் ரிவார்டு சிஸ்டத்துடன் வருகிறது. புதிய மாற்றம் காரணமாக பயனர்களின் அனுபவம் எப்படியெல்லாம் மாறும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

மிந்த்ரா கோடக் ரூபே கிரெடிட் கார்டு:

இந்த வகை கிரெடிட் கார்டை மிந்த்ரா தளங்களில் பயன்படுத்தினால் ஒரு பரிவர்த்தனைக்கு 7.5 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 750 தள்ளுபடி வழங்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட பிரிவுகளில் செலவழிக்கும் போது 5 சதவீதம் கேஷ்பேக் ஒரு மாத ஸ்டேட்மென்ட்டில் அதிகபட்சம் ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அனைத்து விதமான ஆன்லைன் மற்றும் ஆப்லைன் பயன்பாடுகளுக்கு 1.25 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படும். எனினும், வாடகை செலுத்துவது, வாலெட்டில் பணம் சேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்ப பயன்படுத்தினால் இந்த சலுகை பொருந்தாது.

மிந்த்ரா இன்சைடர் சந்தா இலவசமாக வழங்கப்படும். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் யுபிஐ பயன்படுத்தலாம்.

ஒரு காலாண்டிற்கு ரூ. 50,000 பயன்படுத்தினார் ரூ. 250 மதிப்புள்ள இரண்டு பிவிஆர் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

முந்தைய ஆண்டில் ரூ. 2 லட்சம் செலவழித்தால் ரூ. 500 வருடாந்திர கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்.

கோடக் லீக் பிளாட்டினம் கிரெடிட் கார்டு:

கோடக் லீக் பிளாட்டினம் கிரெடிட் கார்டு கொண்டு வாடிக்கையாளர்கள் செலவிடும் ஒவ்வொரு 150 ரூபாய்க்கும் 8 ரிவார்டு புள்ளிகளை பெறலாம். ஒரு ஸ்டேட்மென்ட் சைக்கிளில் பயன்பாட்டு பில்களில் அதிகபட்சம் ரூ. 35,000 மதிப்பிலான ரிவார்டு புள்ளிகளை பெற முடியும். வாலெட்டில் பணம் லோடு செய்வது, இன்சூரன்ஸ், வாடகை, எரிபொருள் பயன்பாடு, அரசு, கல்வி அல்லது கேமிங் சார்ந்த பயன்பாடுகளுக்கு ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படாது.

கோடக் ஜென் கிரெடிட் கார்டு:

கோடக் ஜென் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது பயணம் செய்வோர், அடிக்கடி ஷாப்பிங் செய்வோருக்கு ரிவார்டு மற்றும் பயண பலன்கள் வழங்கப்படுகிறது. கார்டு வைத்திருப்பவர்கள் ஆடை, லைப்ஸ்டைல் சாதனங்கள், மளிகை பொருட்கள் மற்றும் நகைகள் வாங்கும் போது ஒவ்வொரு 150 ரூபாய்க்கும் 10 ஜென் புள்ளிகளை பெற முடியும். மற்ற செலவீனங்கள் அனைத்திற்கும் 150 ரூபாய்க்கும் 5 ஜென் புள்ளிகள் வழங்கப்படும். இதேபோல் பலவகை செலவீனங்களுக்கும் வெவ்வேறு வகையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

Leave a Comment