பான் கார்டில் பிரச்சினையா? உடனே இதை பண்ணுங்க… ரொம்ப ஈசி தான்… வீட்டுக்கே வந்திடும்..!

இந்தியாவில் வருமான வரித்துறை சார்பில் வழங்கப்படும் சான்று ஆவணமாக பான் கார்டு இருக்கிறது. ஆதார் கார்டு போலவே மிகமுக்கிய ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு இருக்கிறது. பான் கார்டு இருந்தால் தான் வங்கிக் கணக்கு திறப்பது, வருமான வரி தாக்கல் செய்வது, வங்கித் துறை சார்ந்த இதர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இப்படி வணிகம் சார்ந்த சேவைகளை பெறுவதற்கு மிகமுக்கிய ஆவணமாக பான் கார்டு இருந்து வருகிறது.

பான் கார்டு தொடர்பாக வருமான வரித்துறை ஏராளமான விதிமுறைகளை வகுத்து இருக்கிறது. இதுதவிர அவ்வப்போது இந்த விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவதும் வாடிக்கையாகி உள்ளது. அதன் படி புதிதாக பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது ஆதார் கார்டு விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே பான் கார்டு அப்டேட் செய்து கொள்வது அவசியம் ஆகும். அதன்படி பான் கார்டு விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். பான் கார்டில் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண் என அனைத்து விவரங்களும் அப்டேட் செய்யப்பட்டு இருக்கலாம். பான் கார்டு பெற்ற பிறகு இந்த விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் செய்திருப்பின் தகவல் தவறாக இருக்கும். இது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.

சமயங்களில் பான் கார்டில் உங்களது பெயர் தவறாக அச்சிடப்பட்டோ அல்லது விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தவறு காரணமாக பெயர் தவறாக வந்திருக்கலாம். இப்படி பான் கார்டில் பெயர் தவறாக அச்சிடப்பட்டு இருந்தால் அதனை எப்படி திருத்த / மாற்ற வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

பான் கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி?

பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய மத்திய அரசின் NSDL அதிகாரப்பூர்வ வலைதளத்தை பயன்படுத்தலாம்.

வலைதளத்தில் நுழைந்தபிறகு பான் கார்டில் அப்டேட் செய்வதற்கான ஆப்ஷனை காணலாம்.

பான் கார்டு அப்டேட் செய்யக்கோரும் ஆப்ஷனில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறகு பெயர் திருத்தம் / மாற்றம் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

ஆவணங்களை சமர்பித்த பிறகு Submit என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

டவுன்லோட் செய்யலாம்:

பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்த பிறகு, திருத்தம் / மாற்றம் செய்யப்பட்ட பான் கார்டின் PDF வடிவத்தை உடனடியாக டவுன்லோட் செய்யலாம். இத்துடன் அச்சிடப்பட்ட புதிய பான் கார்டு எப்போது உங்களுக்கு வந்து சேரும் என்பதையும் சரிபார்க்கலாம். எனினும், அச்சிடப்பட்ட புதிய பான் கார்டினை பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

Leave a Comment