அஞ்சல் அலுவலகங்களில் இனி அந்தத் தொல்லை இல்லை… வெளியான சூப்பர் தகவல்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடைமுறை கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளது. சில்லறை தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு இன்று பெரும்பாலானோர் ரொக்கம் கொண்டு பணப்பரிமாற்றம் செய்யாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தனியார் துறை தொடங்கி அரசு நிறுவனங்கள் வரை எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைமுறை வழக்கமாக மாறி வருகிறது.

இந்த வரிசையில், தற்போது தபால் துறையும் இணைகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் புதிய தகவல்களின் படி இந்தியாவில் செயல்பட்டு வரும் அஞ்சல் அலுவலகங்களில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. தற்போது பரிசோதனை செய்யப்பட்டு வரும் இந்தத் திட்டம் இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.

இந்தியா முழுக்க இயங்கி வரும் அஞ்சல் அலுவலகங்கள் ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிஜிட்டல் பேமண்ட்களை ஏற்கவுள்ளன. தங்களது ஐடி சிஸ்டத்தில் புதிய செயலியை இன்ஸ்டால் செய்த பிறகு இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. தங்களது அக்கவுண்ட்களை யுபிஐ-உடன் சின்க் செய்யவில்லை என்பதால், அஞ்சல் அலுவலகங்கள் டிஜிட்டல் பேமண்ட்களை ஏற்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

கியூ.ஆர். கோட் மூலம் பரிவர்த்தனைகளை சாத்தியப்படுத்தும் புதிய செயலிகளை தங்களது ஐடி உள்கட்டமைப்புகளில் புகுத்த தபால் துறை பணியாற்றி வருகிறது. இது தொடர்பான பணிகள் நிறைவுபெற்று வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிஜிட்டல் பேமண்ட் முறையை அஞ்சல் அலுவலகங்கள் ஏற்றுக் கொள்ளும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பு இந்தத் திட்டம் முதற்கட்டமாக கர்நாடகா மாநிலத்தில் சோதனை அடிப்படையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காக ஐடி 2.0 திட்டம் கர்நாடகா வட்டாரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. கியூஆர் சார்ந்த முன்பதிவு வெற்றிகரமாக செய்யப்பட்டது. மைசூர் தலைமை அலுவலகம், பகல்கோட் அலுவலகங்களில் இந்த திட்டம் சோதனை நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக தபால் துறை சேல் கவுண்ட்டர்களில் கியூஆர் கோடினை அறிமுகம் செய்தது. பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்த தொடங்கியது. எனினும், தொடர்ச்சியான தொழில்நுட்ப இடையூறுகள் மற்றும் நுகர்வோர் குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த செயல்முறை நிறுத்திவைக்கப்பட்டது.

Leave a Comment