RITES நிறுவனத்தில் அசத்தல் வேலை..! மாதம் ரூ.1,40,000 சம்பளத்தில்…இப்போவே விண்ணப்பிங்க..!

இந்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மினி ரத்னா மத்திய பொதுத் துறை நிறுவனமான RITES லிமிடெட் நிறுவனம் போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் முதன்மையான பல்துறை ஆலோசனை அமைப்பாகும்.

இந்த RITES நிறுவனம் காலியாக உள்ள பொறியாளர் (மெக்கானிக்கல்) பணியை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களையும், Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படிக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்:

RITES நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பொறியாளர் பணியில் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

RITES Recruitment
RITES Recruitment

விண்ணப்பதாரர் வயது:

பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 ஆகும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

RITES Recruitment
RITES Recruitment

விண்ணப்பதாரர் தகுதி:

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அல்லது மெக்கட்ரானிக்ஸ் & ஆட்டோமொபைலில் முழுநேர இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

RITES Recruitment
RITES Recruitment

விண்ணப்பிக்கும் முறை:

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் RITES-ன் www.rites.com அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் Application -ஐ திறக்க வேண்டும்.
  • ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் பூர்த்தி செய்த ஆன்லைன் படிவத்தின் பதிவு எண் கிடைக்கும்.
  • தேவையான விவரங்களை நிரப்பும் போது, “அடையாளச் சான்று” விவரங்களை கவனமாகவும் சரியாகவும் நிரப்புமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
  • பிறகு விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
  • பதிவு எண்ணைக் கொண்ட இந்த ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் நகல் நேர்காணலின் போது கொண்டுவர வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: 

பொது/ஓபிசி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.600 செலுத்த வேண்டும். EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக்கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.

RITES Recruitment
RITES Recruitment

தேர்வு முறை:

பொறியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

RITES Recruitment
RITES Recruitment

சம்பளவிவரம் மற்றும் கடைசி தேதி: 

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 15 ஆகும். அதனைத்தாண்டி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

RITES Recruitment
RITES Recruitment

Leave a Comment