சென்ட்ரல் பேங்கில் வேலைவாய்ப்பு…உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள் மக்களே..!!

இந்திய மத்திய வங்கி அல்லது சென்ட்ரல் பேங்க் ஆஃப் (Central Bank of India )  இந்தியா இந்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கியாகும்.  இந்த  Central Bank of India  ஆனது தற்போது வேலைவாய்ப்புகான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, Manager Scale  பணிக்கு பல காலியிடங்கள் இருப்பதாகவும், இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

காலியிடங்கள் எண்ணிக்கை 

இந்த Manager Scale  பணிக்கு  கிட்டத்தட்ட 1000 காலிப்பணியிடங்கள் உள்ளது. எனவே, இந்த பணியில் சேர விரும்பு விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரத்தை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு 

இந்த பணியில் சேர விருப்பமும் ஆர்வமும் உங்களுக்கு இருந்தால் உங்களுடைய வயது கண்டிப்பாக 32-ஆக இருக்கவேண்டும். அப்படி 32 வயதாக இருந்தால் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

தேவையான கல்வித்தகுதி 

இந்த பணியில் சேர  நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

சம்பள விவரம் 

இந்த Manager Scale  பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சம்பளமாக 48170-1740(1)-49910-1990(10)-69810 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை 

இந்த பணியில் சேர நீங்கள் விண்ணப்பித்தீர்கள் என்றால், அதில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Online) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிக்கவேண்டும்..? 

இந்த பணியில் சேர ஆர்வமும் விருப்பமும் உங்களுக்கு இருந்தால் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibpsonline.ibps.in/cbimmjun23/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி வரும் 15ம் தேதி என்பதால் அதற்கு முன்னதாகவே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த PDF-ஐ க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Leave a Comment