ICF சென்னையில் அப்ரண்டீஸ் வேலைவாய்ப்பு..இன்றே விண்ணப்பித்து கொள்ளுங்க..

சென்னையில் உள்ள இரயில்பெட்டி இணைப்பு தொழிற்சாலை உலகிலேயே மிகபெரிய இரயில்பெட்டி தொழிற்சாலைகளில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது அப்ரண்டீஸ் பணிக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பங்களை http://www.pb.icf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்று கொள்ளலாம்.

முக்கியமான தேதிகள்:

இப்பணிக்கான விண்ணப்பங்களை 30.05.2023 முதல் 30.06.2023 வரை சமர்பிக்கலாம்.

பணியிடம்:

இந்தியா முழுவதும்( தமிழ்நாடு விண்ணப்பதாரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்).

காலியிடங்கள்:

அப்ரண்டீஸ்- 782 காலியிடங்கள்.

வயது வரம்பு:

முன்னாள் ITI அப்ரண்டீஸ்- 15 முதல் 24 ஆண்டுகள்

ஃப்ரஷர்ஸ் அப்ரண்டீஸ்- 15 முதல் 24 ஆண்டுகள்

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பினை முடித்திருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை காணலாம்.

வருமானம்:

இப்பணிக்கு ரூ.6000-7000 வரை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • இப்பணிக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
  • பிற்படுத்தப்பட்டோர்/பழங்குடியினர்/ஊனமுற்றோர்/பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு நிலை:

  1. மெரிட் லிஸ்ட்
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://pb.icf.gov.in/act/notification.pdf

Leave a Comment