அட்ராசக்க..’எய்ம்ஸ்’ மருத்துவமனையில் வேலைவாய்ப்பு…யோசிக்காம அப்ளை பண்ணுங்க…!!

ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (எய்ம்ஸ்) மருத்துவமனை ஆசிரியப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேவை என வேலைவாய்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் AIIMS இன் அதிகாரப்பூர்வ தளமான aiimsnagpur.edu.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை எடுத்துக்கொண்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.  மற்றும் விண்ணப்ப செயல்முறையை சமர்ப்பிக்க கடைசி தேதி ஜூலை 23 ஆகும் மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 58 பணியிடங்கள்

  • பேராசிரியர்: 11 பதவிகள்
  • கூடுதல் பேராசிரியர்: 9 பணியிடங்கள்
  • இணை பேராசிரியர்: 15 பணியிடங்கள்
  • உதவி பேராசிரியர்: 23 பணியிடங்கள்

கல்வி தகுதி

தகுதியான விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து அந்தந்த துறைகள்/பாடங்களில் MD/MS பட்டம் அல்லது மருத்துவப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் 

  • பேராசிரியர்: நிலை-14A, ரூ 1,68,900 – ரூ 2,20,400
  • கூடுதல் பேராசிரியர்: நிலை- 13A2+, ரூ 1,48,200 – ரூ 2,11,400
  • இணைப் பேராசிரியர்: நிலை- 13A1+, ரூ. 1,38,300 – ரூ. 2,09,200
  • உதவி பேராசிரியர்: நிலை- 12, ரூ 1,01,500 – ரூ 1,67,400

வயது வரம்பு 

உதவி பேராசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது 50 வயது இருக்கவேண்டும், அதைப்போலவே, பேராசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது 58.
அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு உள்ளது. அந்த விவரங்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள PDFக்கு சென்று பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை 

இந்த வேலையில் சேர ஆர்வமும், விருப்பமும் உங்களுக்கு இருந்தால் கீழே உள்ள PDF-ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படித்தவத்தை பதிவிறக்கம் செய்துவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம்.  விண்ணப்பத்திற்கான கடைசி தேதி ஜூலை 30  என்பதால் அதற்கு முன்னதாகவே விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்ப படிவம் அதிகாரப்பூர்வ https://aiimsnagpur.edu.in/  இணையதளத்திலும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. PDF-

முக்கியதேதிகள்

  • விண்ணப்பம் தொடங்கிய தேதி – 24 ஜூன் 2023.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 27 ஜூலை 2023.

முகவரி The Executive Director, AIIMS Nagpur,
Administrative Block, Plot no.2, Sector -20,
MIHAN,
Nagpur-441108

Leave a Comment